காலில் காயம் பட்டும் வேதாளமாக நடித்த அஜீத்...!

Bookmark and Share

காலில் காயம் பட்டும் வேதாளமாக நடித்த அஜீத்...!

வேதாளம் இறுதிநாள் படப்பிடிப்பின் போது அஜீத் காலில் காயம் ஏற்பட்டு விட்டதாம். ஆனாலும் கவலைப்படாமல் முழு படப்பிடிப்பையும் முடித்துக் கொடுத்தாராம் அஜீத்.

அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன், ராகுல் தேவ், கபீர் சிங், வித்யூலேகா உள்ளிட்ட பலர் நடிக்கும் படத்தை இயக்கியுள்ளார் 'சிறுத்தை' சிவா. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்து வருகிறார்.

வேதாளம் படத்தில் கால்டாக்சி டிரைவராக நடிக்கிறாராம் அஜீத். சூரிதான் கால்டாக்சி நிறுவனத்தின் ஓனராம். இதனை யாரோ பத்தவைத்து விட சூரியின் வாய்க்கு பூட்டு போட்டு விட்டார்களாம். இது ஒரு புறம் இருக்க தங்கையின் ஆவி தலயில் உடம்பில் புகுந்து கொண்டு பழிவாங்கும் கதை என்றும் பரவி வந்தது. எப்படியே வேதாளம் படத்தில் படப்பிடிப்பு முடிந்து விட்டது. தீபாவளிக்கு படம் ரிலீஸ் என்று பேசப்படுகிறது.

நடனக்காட்சியில் அஜீத் இப்படத்தின் இறுதிநாள் படப்பிடிப்பு அக்டோபர் 15ம் தேதி நடைபெற்றது. அஜித் நடனமாடும் சில காட்சிகளை படமாக்கினார்கள். அப்போது அவருக்கு காலில் அடிபட்டது.

வலியில் துடித்த அஜீத் 'ஆரம்பம்' படத்தின் போது காலில் அடிபட்டு, ப்ளேட் வைக்கப்பட்டது. அதே இடத்திலேயே மீண்டும் அடிபட்டதால் வலியால் துடித்தார் அஜீத். படக்குழு உடனடியாக படப்பிடிப்பை ரத்து செய்தது.

இறுதிநாள் படப்பிடிப்பு நிறுத்த வேண்டாம், ஒரு மணி நேரம் கழித்து ஆரம்பிக்கலாம் என்று கூறிவிட்டு ஒய்வெடுத்திருக்கிறார். அதற்கு பிறகு, மீண்டும் கால் வலியோடு முழுப் படப்பிடிப்பையும் முடித்துக் கொடுத்துவிட்டு கிளம்பியிருக்கிறார் அஜீத்.


Post your comment





Related News
வேதாளம் படத்திற்காக இத்தனை கஷ்டங்களை கடந்தார்களா! வெளிவந்த தகவல்
இந்தியா தாண்டி பாகிஸ்தான் வரை அஜித் ஃபீவர் தான்!
அஜித் படத்தின் வில்லன் எடுத்த புதிய முயற்சி
விஜய்யின் தெறியால் மீண்டும் ரிலீஸான வேதாளம்!
50 ஆவது நாள் கொண்டாட்டத்தில் அஜித்தின் வேதாளம்
அஜித்தின் அடுத்த படத்தை தயாரிப்பது இவர் தான்?
அஜித்தை ஆஸ்பத்திரியில் சந்தித்தாரா விஜய்? விளக்கமளித்த அஜித் தரப்பு
சூப்பர்ஸ்டாரை தொடர்ந்து அஜித்திற்கு வந்த ஆசை
அஜித்தின் தொடர் வெற்றிக்கு காரணம் இதுதானா...?
அஜீத் 3 மாதம் ஓய்வெடுக்க டாக்டர்கள் அறிவுரை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions