அஜித்தின் கதாப்பாத்திரம் குறித்து வெளிவந்த சுவாரஷ்ய தகவல்

Bookmark and Share

அஜித்தின் கதாப்பாத்திரம் குறித்து வெளிவந்த சுவாரஷ்ய தகவல்

அஜித்,  ஸ்ருதிஹாசன், லட்சுமிமேனன், தம்பிராமையா, அஸ்வின், அப்புக்குட்டி, கபீர் சிங் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் வேதாளம் படம் நவம்பர் 5ம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, கொல்கத்தா மற்றும் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்ட பணிகள் சென்னையில் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இப்படம் குறித்த சில சுவாரஷ்ய விஷயங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

அதாவது இப்படத்தில் அஜித், கணேஷ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறாராம். லட்சுமி மேனன், தமிழ் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். தம்பிராமையா இவர்களுக்கு அப்பாவாகவும், அப்புக்குட்டி அஜித்துக்கு நண்பராகவும் நடித்துள்ளார்களாம்.

ஆரம்பத்தில் கணேஷாக வரும் அஜித், பிளாஸ்பேக் காட்சிகளில் டானாக வருகிறாராம். கணேஷ் கதாபாத்திரம் முழுவதும் கொல்கத்தாவில் படமாக்கியுள்ளனர். டான் கதாபாத்திரத்தை சென்னையில் படமாக்கியிருக்கிறார்கள். இப்படத்தின் போஸ்டர்கள், டீசர் மற்றும் பாடல்கள் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.


Post your comment





Related News
அஜீத் 3 மாதம் ஓய்வெடுக்க டாக்டர்கள் அறிவுரை
அஜீத்தை வளைக்க நினைக்கும் அரசியல் கட்சி.. சிக்குவாரா?
என் இதயத்தில் இருக்கிறார்கள் ரசிகர்கள்: பல வருடங்கள் கழித்து அஜித் பரபரப்பு பேட்டி
சிங்கபூரில் மாஸ் காட்டும் அஜித்!
உற்சாகத்தில் இருந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அஜித்
அஜீத் ரசிகர்கள் எடுக்கும் பிரமாண்ட இசை வெளியீட்டு விழா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions