அஜித்தின் வேதாளம் படத்தை ரீமேக் செய்வதில் திடீர் சிக்கல்?

Bookmark and Share

அஜித்தின் வேதாளம் படத்தை ரீமேக் செய்வதில் திடீர் சிக்கல்?

அஜித் நடித்த 'வேதாளம்' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி வெற்றி பெற்றது. ஒரு மொழியில் வெற்றி பெறுகிற திரைப்படம் இன்னொரு மொழியில் திரும்ப எடுக்கப்படம்.

அந்த வகையில் 'வேதாளம்' திரைப்படம் தெலுங்கில் ரீமேக் ஆகவுள்ளதாகவும், அதில் பிரபல தெலுங்கு நடிகர் பவன்கல்யாண் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் இருக்கின்றன.

அதோடு நில்லாமல் 'வேதாளம்' திரைப்படம் கன்னடத்திலும் ரீமேக் ஆகவுள்ளதாக  செய்தி வெளியாகியுள்ளது. கன்னடத்தில் அஜித் நடித்த வேடத்தில் புனித் ராஜ்குமார் நடிக்கவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.  

தமிழில் வேதாளம் படத்தைத் தயாரித்த ஏ.எம்.ரத்னமே, தெலுங்கு மற்றும் கன்னடப் படத்தையும்   தயாரிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

ஸ்ருதிஹாசன் மற்றும் லட்சுமிமேனன் வேடத்தில் நடிக்க நடிகைகள் தேர்வு நடைபெற்று வருவதாகவும், இதன்பின்னர் இந்த இரண்டு படங்களின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் தகவல்கள் வந்தன. அதில் ஒரு சிக்கல் ஏற்பட்டிருப்பதாக இப்போது சொல்லப்படுகிறது. 

ஒரு படத்தை இன்னொரு மொழிக்குக் கொண்டு செல்ல வேண்டுமென்றால், அப்படத்தின் தயாரிப்பாளர் மட்டுமின்றி கதையை எழுதியவரும் அதற்குச் சம்மதிக்கவேண்டும்.

இப்படங்களை மொழிமாற்றம் செய்ய இயக்குநர் சிவா சம்மதம் தெரிவிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. அதற்குக் காரணம், வேதாளம் படத்தை இயக்கியதற்காகவே சிவாவுக்கு சம்பளப்பாக்கி இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

அதோடு மொழிமாற்ரு உரிமைக்கான தொகையையும் சேர்த்துக் கொடுத்தால்தான் சம்மதம் தருவார் என்று சொல்லப்படுகிறது. இதனால் வேதாளம் ரீமேக் தாமதமாவதாகச் சொல்லப்படுகிறது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions