அஜித்தின் வீரம், வேதாளம் படங்கள் தெலுங்கில் ரீமேக் ஆகிறது

Bookmark and Share

அஜித்தின் வீரம், வேதாளம் படங்கள் தெலுங்கில் ரீமேக் ஆகிறது

அஜித் நடிப்பில் தமிழில் வெளிவந்த ‘வீரம்’, ‘வேதாளம்’ ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. இந்த இரண்டு படத்தையும் ‘சிறுத்தை’ சிவா இயக்கியிருந்தார். இப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, தனது அடுத்த படத்தையும் இயக்கும் வாய்ப்பை சிவாவுக்கே வழங்கியுள்ளார் அஜித்.

இந்நிலையில், ‘வீரம்’, ‘வேதாளம்’ ஆகிய இரண்டு படங்களையும் தெலுங்கில் ரீமேக் செய்யப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த இரண்டு படங்களிலும் ஹீரோவாக நடிக்க பவன் கல்யாண் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பவன் கல்யாண் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘சர்தார் கப்பார் சிங்’ படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது.

அந்த தோல்வியை ஈடுகட்டும் வகையில் இந்த படங்களில் அவர் நடிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் ‘வீரம்’ படத்தை தெலுங்கில் ‘ஜில்லா’ இயக்குனர் நேசன் இயக்குவார் என்று கூறப்படுகிறது. பவன் கல்யாண் தற்போது தெலுங்கில் எஸ்.ஜே.சூர்யா இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை முடித்தபிறகு ‘வீரம்’ ரீமேக்கில் நடிப்பார் என்று கூறப்படுகிறது. 


Post your comment





Related News
அஜித்தின் அடுத்தப்படம் - அஜித்தின் சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகமா?
அஜித்தின் ரீமேக் படத்திற்கு இப்படி ஒரு மார்க்கெட்டா?
அடுத்த அதிரடியை தொடங்கிய அஜித் ரசிகர்கள்- இன்று என்ன ஸ்பெஷல் தெரியுமா?
நாளை தல-56 டைட்டீல்!
அஜித் போட்ட ஆர்டர்!
இரட்டை வேடத்தில் கலக்கபோகும் அஜித்!
பொங்கலுக்குத்தான் தல 55 ரிலீஸ்!
வீரம் ரீமேக்கை நிறுத்தி வைத்திருக்கும் அஜித்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions