இரட்டை வேடத்தில் கலக்கபோகும் அஜித்!

Bookmark and Share

இரட்டை வேடத்தில் கலக்கபோகும் அஜித்!

என்னை அறிந்தால் படத்தின் வெற்றியை அடுத்து  வீரம் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளார் என்பது அனைவரும் அறிந்த செய்திதான்.  தற்போது கர்ப்பமாக இருக்கும் ஷாலினிக்கு குழந்தை பிறந்த பிறகு அந்தப் படத்தின் படபிடிப்பு ஆரம்பமாகும் என தெரிகிறது.  

இன்னும் பெயர் வைக்கப்படாத அந்த படத்திற்கு தற்போது அஜித் ரசிகர்கள் தல 56 என தற்காலிகப் பெயர் வைத்துள்ளனர்.  தல 56 படத்தில் அஜித் நடிக்கிறார் என்பது மட்டும் தான் அனைவரும் அறிந்த தகவல், பலருக்கும் அறியாத தகவல் என்ன தெரியுமா? அந்தப்படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.

கிராமத்து இளைஞனாக ஒரு வேடத்திலும், நகரத்தில் வசிப்பவராகவும் இன்னொரு வேடத்திலும் நடிக்கிறாராம் அஜித்.  இவருடன் சந்தானம் படம் முழுவதும் இணைந்து வருகிறார்.  

இதற்கு முன்பு அஜித் இரட்டை வேடத்தில் நடித்த படங்களில், அசல் படம் மட்டும்தான் தோல்வியடைந்தது. அதற்கு முன் அஜித் இரட்டை வேடங்களில் நடித்த வாலி, வில்லன் படங்கள் மாபெரும் வெற்றி பெற்றுள்ளன. தல 56 எந்தப் பட்டியலில் சேரும் என்று தெரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்..! 


Post your comment





Related News
அஜித்தின் அடுத்தப்படம் - அஜித்தின் சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகமா?
அஜித்தின் ரீமேக் படத்திற்கு இப்படி ஒரு மார்க்கெட்டா?
அடுத்த அதிரடியை தொடங்கிய அஜித் ரசிகர்கள்- இன்று என்ன ஸ்பெஷல் தெரியுமா?
அஜித்தின் வீரம், வேதாளம் படங்கள் தெலுங்கில் ரீமேக் ஆகிறது
நாளை தல-56 டைட்டீல்!
அஜித் போட்ட ஆர்டர்!
பொங்கலுக்குத்தான் தல 55 ரிலீஸ்!
வீரம் ரீமேக்கை நிறுத்தி வைத்திருக்கும் அஜித்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions