அஜித்திற்கு அட்வைஸ் கொடுத்த பிரபல நடிகை

Bookmark and Share

அஜித்திற்கு அட்வைஸ் கொடுத்த பிரபல நடிகை

அஜித் தனக்கு நல்லது யார் சொன்னாலும் கேட்டுக்கொள்வார். அவர் பெரியவர், சிறியவர் என்றெல்லாம் பார்க்கவே மாட்டார். அந்த வகையில் சமீபத்தில் வளர்ந்து வரும் ஒரு குணச்சித்திர நடிகை வித்யூலேகா, அஜித்திற்கு ஒரு அட்வைஸ் கொடுத்துள்ளார். 

பேஸ்புக், டுவிட்டர் இதுப்போன்ற சமூக வலைத்தளங்களில் இல்லை என்றால் மனம் நிம்மதியாக இருக்கும் என வித்யூலேகாவிடம் தெரிவித்தாராம் அஜீத். அதற்கு வித்யூலேகா ‘நம்மை பற்றிய பேச்சுகளுக்கு பதில் அளிக்கவில்லை என்றால், நாம் அவர்களுக்கு பயந்துவிட்டோம் என்று நினைத்து விடுவார்கள் சார்’ என கூற, அஜித் வழக்கம் போல் மெல்லிய புன்னகையை வெளிப்படுத்தினாராம்.

அஜித்துடன் வித்யூலேகாவுக்கு வேதாளம் இரண்டாவது படம். இதற்கு முன் வீரம் படத்தில் சந்தானம் ஜோடியாக நடித்தவர் இப்போது லட்சுமி மேனனுக்கு தோழியாக இரண்டாம் பாதியில் இடம் பிடித்துள்ளார்.

அஜித் முகநூல், ட்விட்டர் என எந்த சமூக வலை தளங்களில் இல்லாத நிலையில் இந்தக் கருத்து கண்டிப்பாக அஜித்தை சமூக வலைதளங்கள் பக்கம் இழுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
பலகுரல் மன்னனும், நகைச்சுவை நடிகருமான ராக்கெட் ராமநாதன் காலமானார்
என்னை வில்லனா காட்டினாலும் பரவாயில்லை என்று கதை கேட்காமல் தல அஜித் நடித்த படம் எது தெரியுமா..?
படப்பிடிப்பில் தளபதி விஜய் செய்த விசயம்..! மாட்டிக்கொண்ட பிரபலங்கள்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
புதுமையான ஒரு மேடை நிகழ்ச்சி ஒன்றிற்கான முயற்சியில் இசையமைப்பாளர் ரமேஷ் வினாயகம்
இந்த தடவையாவது எடுப்படுமா திரிஷாவின் பேயாட்டம்- வருகிறாள் மோகினி
"எம். ஜி. ஆர்" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions