மாசு படத்தால் கொந்தளிக்கும் அஜீத், விஜய் ரசிகர்கள்

Bookmark and Share

மாசு படத்தால் கொந்தளிக்கும் அஜீத், விஜய் ரசிகர்கள்

மாசு படத்தில் வழக்கம்போல தனது நகாசு மற்றும் ஜிகினா வேலைகளை கொஞ்சம் தாராளமாகவே காட்டியிருக்கிறார் வெங்கட்பிரபு. அஜீத், விஜய் இருவரின் நண்பராகிவிட்டதால் அவர்கள் படங்களின் பின்னணி இசையையும் படத்தில் பயன்படுத்தியுள்ளார். 

முக்கியமாக, சூர்யா கத்தியை எடுக்கும் காட்சியில், கத்தி படத்தின் பின்னணி இசை வருகிறது. அதேபோல் நான் கடவுள் ராஜேந்திரன் அறிமுகக் காட்சியில் வீரம் படத்தின் பின்னணி இசை.

சூர்யாவும், பிரேம்ஜியும் கப்பல் படை அதிகாரிகளாக வரும் காட்சியில் சூர்யாவின் பெயரை ஜெகதீஷ் என்றும், பிரேம்ஜியின் பெயரை விநாயக் மகாதேவ் என்றும் வைத்திருப்பார். ஜெகதீஷ் கத்தியில் விஜய்யின் பெயர். விநாயக் மகாதேவ் மங்காத்தாவில் அஜீத்தின் பெயர். 

இந்த பின்னணி இசை, பெயர் இரண்டிலும் ஹீரோ சூர்யாவுக்கு விஜய்யின் பெயர், பின்னணி இசை என்றால், காமெடியன்களுக்கு அஜீத்தின் கதாபாத்திரப் பெயர் மற்றும் பின்னணி இசை.

எப்படி எங்க தலயின் பெயரை ஒரு காமெடியனுக்கு பயன்படுத்தலாம் என்று அஜீத் ரசிகர்கள் இணையத்தில் குமுற, சபாஷ் இதுதான் சரி என்று விஜய் ரசிகர்கள் ஆர்ப்பரிக்கிறார்கள். வெங்கட்பிரபு இந்த விஷமத்தை தெரிந்தேதான் செய்தாரா?


Post your comment





Related News
மீண்டும் ஒரே நாளில் மோதும் தல - தளபதி..!
Inkem Inkem பாடல் புகழ் நாயகிக்கு தல, தளபதி இருவரில் யாரை பிடிக்கும் என்று தெரியுமா..?
தல, தளபதியை விடுங்க, வினோத் பார்வை இந்த முன்னணி நடிகர் மீது தானாம்..!
அஜித்தின் இந்த படங்கள் எல்லாம் விஜய்க்காக தயாரிக்கப்பட்டது தானா? இயக்குனரின் ஓபன்டாக்
ஜெயலலிதா மரணத்தில் அஜித்துக்கு நடந்தது இப்போ விஜய்க்கு - ரசிகர்கள் வருத்தம்.!
அஜித்தும் இல்லை, விஜயும் இல்லை, இயக்குனர் வினோத்தின் அடுத்த ஹீரோ இவரா? - வெளியான தகவல்.!
சிக்கலான நேரத்தில் விஜய்க்கு ஆதரவாக இறங்கிய பிரபல நடிகர்!
அஜித், விஜய்யை விட அதிக பட்ஜெட்டில் நடிக்கும் ராணா! கதை இதுதான்..
விஜய் ஆல்ரவுண்டர் ஆனால் அஜித்? - ஒத்த வார்த்தையில் சிவகார்த்திகேயன் பளீச் பதில்.!
அஜித், விஜய் சம்பளத்திற்கு செக் வைத்த விஷால் - இனி இப்படி தானா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions