ஜெயலலிதா மரணத்தில் அஜித்துக்கு நடந்தது இப்போ விஜய்க்கு - ரசிகர்கள் வருத்தம்.!

Bookmark and Share

ஜெயலலிதா மரணத்தில் அஜித்துக்கு நடந்தது இப்போ விஜய்க்கு - ரசிகர்கள் வருத்தம்.!

திமுக தலைவர் மு.கருணாநிதி அவர்கள் வயது முதிர்வு காரணமாக மரணமடைந்தார். ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டு இருந்த அவரது உடலுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் நேரில் சென்று இரங்கல் தெரிவித்து வந்தனர்.

தல அஜித் மற்றும் ஷாலினியும் நேற்று காலையே ராஜாஜி அரங்கிற்கு வந்து அஞ்சலி செலுத்தி விட்டு சென்றனர். ஆனால் தளபதி விஜய் சர்கார் படத்தின் படப்பிடிப்பிற்காக அமெரிக்காவில் இருந்ததால் அவரால் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த வர இயலவில்லை.

இதே நிலை ஜெயலலிதா இறப்பின் போது அஜித்திற்கு நடந்தது. அஜித் ஜெயலலிதா மறைவின் போது படப்பிடிப்பிற்காக வெளிநாடு சென்று விட்டதால் அப்போது அவரால் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்த வர முடியவில்லை.

ஆனால் விஜயின் மனைவி சங்கீதா ராஜாஜி அரங்கம் சென்று மு.கருணாநிதி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions