‘அதுக்கெல்லாம் நீங்க சரிப்பட்டு வரமாட்டீங்க ‘ன்னு சொன்னாலும்,’ அஜித் விஜய்க்கு மட்டும்தானா?-முறைப்பில் விக்ரம்

Bookmark and Share

‘அதுக்கெல்லாம் நீங்க சரிப்பட்டு வரமாட்டீங்க ‘ன்னு சொன்னாலும்,’ அஜித் விஜய்க்கு மட்டும்தானா?-முறைப்பில் விக்ரம்

அஜித், விஜய் செய்யறாங்கன்னா .. அவுங்க மாஸ் வேற. அவுங்க சம்பளம் வேற. அவுங்க லெவல் வேற. நீங்களும் இப்படி அடம் பிடிச்சா என்ன செய்ய? என்று அழுகாத குறையாக கேட்டபோதும், விக்ரம் அதை செஞ்சே தீரணும்ன்னு அடம் பிடிக்கிறாராம்.

ஒண்ணும் பெரிய விஷயமில்லை. அஜித், விஜய் படத்துக்கெல்லாம் எடுத்தவுடனே டைட்டில் வைக்கிறதில்லை. விஜய் 60-61,அஜித் 55- 56- 57ன்னு சொல்லி, அப்புறம் பேர் வைக்கிறதையே பெரிய எதிர்பார்ப்பை கிளப்பிவிட்டு பண்ணுகிற அந்த ஜில்லாலக்கடி வேலை விக்ரமுக்கு வேணுமாம்.

இருமுகனுக்கு அப்புறம்,விக்ரம் கவுதம் மேனன் இயக்கும் படத்தில் நடிக்கிறார்.இந்த படத்துக்கு துருவநட்சத்திரம்ன்னு பேர் வச்சு பல ஆண்டுகள் ஆகிறது.

அதில் ஒண்ணும் பண்ணமுடியாது என்பதினால், வாலு இயக்குனர் இயக்க, விக்ரம் நடிக்க உள்ள அந்த படத்துக்கு ரெடியாய் இருக்கிற பேரை சொல்லக்கூடதுன்னு சொல்லிட்டாராம் விக்ரம்.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions