விஜய் பிறந்தநாளை கொண்டாடும் அஜித் ரசிகர்கள்

Bookmark and Share

விஜய் பிறந்தநாளை கொண்டாடும் அஜித் ரசிகர்கள்

வருகிற ஜுன் 22-ந் தேதி நடிகர் விஜய்க்கு பிறந்தநாள். இந்த பிறந்தநாளை கொண்டாட விஜய் ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்வது, சமூக நலப் பணிகளில் ஈடுபடுவது, ரத்ததானம் செய்வது என ஒவ்வொரு ரசிகரும் விஜய்யின் பிறந்தநாளை கொண்டாட தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில், சினிமாவில் விஜய்க்கு சக போட்டியாளராக சித்தரிக்கப்பட்ட அஜித்தின் ரசிகர்கள் விஜய் பிறந்தநாளை கொண்டாட முன்வந்துள்ளது அனைவருக்கும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. சென்னை கிங் மேக்கர்ஸ் தல அஜித் குமார் பேன்ஸ் கிளப் அஜித் ரசிகர் மன்றம் சார்பாக விஜய் பிறந்தநாளன்று 41 பேர் ரத்ததானம் செய்யவிருக்கிறார்கள். மேலும், 500 பேருக்கு அன்னதானம், 41 மரக்கன்று நடுவது, 100 பேருக்கு இலவச பாடப்புத்தகம் தருவது என பல்வேறு நலத்திட்டங்களை செய்யவிருக்கின்றனர்.

விஜய்யும் அஜித்தும் சினிமாவை தாண்டி நண்பர்களாக இருக்கும் நிலையில், அவர்களுடைய ரசிகர்களும் இதுபோன்ற நல்ல காரியங்களில் ஒற்றுமையுடன் செயல்படுவது பாராட்டுக்குரியது என பல்வேறு தரப்பினரும் அவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.


Post your comment





Related News
மீண்டும் ஒரே நாளில் மோதும் தல - தளபதி..!
Inkem Inkem பாடல் புகழ் நாயகிக்கு தல, தளபதி இருவரில் யாரை பிடிக்கும் என்று தெரியுமா..?
தல, தளபதியை விடுங்க, வினோத் பார்வை இந்த முன்னணி நடிகர் மீது தானாம்..!
அஜித்தின் இந்த படங்கள் எல்லாம் விஜய்க்காக தயாரிக்கப்பட்டது தானா? இயக்குனரின் ஓபன்டாக்
ஜெயலலிதா மரணத்தில் அஜித்துக்கு நடந்தது இப்போ விஜய்க்கு - ரசிகர்கள் வருத்தம்.!
அஜித்தும் இல்லை, விஜயும் இல்லை, இயக்குனர் வினோத்தின் அடுத்த ஹீரோ இவரா? - வெளியான தகவல்.!
சிக்கலான நேரத்தில் விஜய்க்கு ஆதரவாக இறங்கிய பிரபல நடிகர்!
அஜித், விஜய்யை விட அதிக பட்ஜெட்டில் நடிக்கும் ராணா! கதை இதுதான்..
விஜய் ஆல்ரவுண்டர் ஆனால் அஜித்? - ஒத்த வார்த்தையில் சிவகார்த்திகேயன் பளீச் பதில்.!
அஜித், விஜய் சம்பளத்திற்கு செக் வைத்த விஷால் - இனி இப்படி தானா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions