விஜய்-அஜித்திற்கு போட்டியாக களமிறங்கும் பாபிசிம்ஹா!

Bookmark and Share

விஜய்-அஜித்திற்கு போட்டியாக களமிறங்கும் பாபிசிம்ஹா!

ரஜினி நடித்த பாட்ஷா படத்தை மிஞ்ச இன்று வரை எந்த படமும் இல்லை என்பதே உண்மை. இதை மறுப்பவர்கள் எவரும் இல்லை. தற்போது சுரேஷ்கிருஷ்ணா இப்படத்தின் இராண்டாம் பாகத்தை எடுக்கப்போவதாக ரஜினியிடம் கூறியுள்ளார்.

ஆனால், ரஜினி ‘பாட்ஷாவுக்குன்னு இன்னும் தனி கிரேஸ் இருக்கு, அத நாம கெடுத்துற வேண்டாம்னு’ நடிக்க மறுப்பு தெரிவித்துவிட்டாராம். அதன் பின்பு அஜித்தை வைத்து எடுக்க விருப்பப்படுவதாக சுரேஷ்கிருஷ்ணா தெரிவித்தார். ஆனால் அஜித் இதுவரை வேண்டும், வேண்டாம் என எந்த பதிலும் கூறாமல் மௌனமாகவே உள்ளார்.

இன்னொருபுறம் விஜய், பாட்ஷா-2 வில் அஜித் நடிக்க ஒப்புக்கொள்ளாவிட்டால் நான் நடிக்க தயார் என சுரேஷ் கிருஷ்ணாவுக்கு தூது விட்டிருப்பதாக ஒரு தகவல்கள் வெளிவந்துள்ளது.

சமீபத்தில் சுரேஷ்கிருஷ்ணாவை விஜய்க்கு நெருக்கமானவர் ஒருவர் சந்தித்ததாகவும், ‘பாட்ஷா 2′ படத்தில் விஜய் நடிக்க ஆர்வமாக இருப்பதாகவும் கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது.

தற்போது புதுமுக நடிகர் ஒருவருக்கு நான் தான் அடுத்த ரஜினி என்ற ஆசை கொஞ்சம் கொஞ்சமாக வளர ஆரம்பித்துள்ளது. சமீபத்தில் தேசியவிருது வென்ற பாபி சிம்ஹாவை பார்பவர்கள் எல்லாம் ‘நீ ரஜினியை போல் இருக்க. அவருக்கு அடுத்து உனக்கு தான் முகபாவம் பக்காவாக இருக்கு. நீ பெரிய நடிகரா வளரனும்’ எனக்கூறியதன் விளைவு தான் இது என்கின்றனர்.

அதன் பிறகுதான் மூன்று முகம் படத்தின் ரீமேக் வாய்ப்பு பாபி சிம்ஹாவிற்கு வந்தது. இவர் நடித்த மசாலாபடத்தின் இசைவெளியீட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. காரணம் பாட்ஷா2 படத்தின் வாய்ப்பிற்காகவே அந்த ஐஸ் என்கின்றனர்.


Post your comment





Related News
பாபி சிம்ஹா ஜோடியான ரம்யா நம்பீசன்
"அக்னி தேவ்" படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்..!
சூப்பர்ஸ்டார் அடுத்த படம் இவருடன்தான்? வெளியான லேட்டஸ்ட் தகவல்
ரஜினியின் ஷூட்டிங் அடுத்து இங்குதான்! புதிய தகவல்
‘சாமி ஸ்கொயர் ’படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
"பயப்படாம கட்டிப்புடி " ; 'X வீடியோஸ் நடிகருக்கு ஊக்கம் கொடுத்த லட்சுமிராய்..
`திருட்டுப்பயலே-2' படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
நவம்பர் 30ல் வெளியாகும் சுசி கணேசனின் ‘திருட்டுப்பயலே 2’
`திருட்டுபயலே-2' படத்தின் ரிலீஸ் அறிவிப்பு
விக்ரமுக்கு வில்லனாகும் பாபி சிம்ஹா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions