அஜித்தைத் தொடர்ந்து விஜய்யும் ஆந்திரா செல்கிறார்!

Bookmark and Share

அஜித்தைத் தொடர்ந்து விஜய்யும் ஆந்திரா செல்கிறார்!

கெளதம்மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த படம் என்னை அறிந்தால். அவருடன் அனுஷ்கா, த்ரிஷா உள்பட பலர் நடித்த இப்படம் கடந்த பிப்ரவரி 5-ந்தேதி திரைக்கு வந்தது.

பின்னர் தெலுங்கில் டப் செய்யப்பட்ட இப்படத்தை சரியான தியேட்டர் கிடைக்காமல் வெளியிடாமல் வைத்திருந்தவர்கள் இன்று முதல் ஆந்திரா மற்றும் கர்நாடகத்தில் சுமார் 100 தியேட்டர்களில் வெளியிடுகிறார்கள்.

இப்படத்துக்கு எந்தவாடுகானி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், 2014ல் மோகன்லாலுடன் இணைந்து விஜய் நடித்த படம் ஜில்லா. சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்த இந்த படத்தை ஆர்.டி.நேசன் இயக்க, டி.இமான் இசையமைத்திருந்தார்.

காஜல்அகர்வால், சூரி, நிவேதா தாமஸ், சம்பத்ராஜ் உள்பட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர். மோகன்லால்- விஜய் காம்பினேசன் என்பதால் இந்த படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

சென்டிமென்ட், காதல், ஆக்சன் என அனைத்தும் கலந்த கலவையில் உருவான இப்படம் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பும் பெற்றது. இந்நிலையில், ஜில்லா படத்தின் தெலுங்கு டப்பிங் வேலைகள் கடந்த சில தினங்களாக நடைபெற்று வந்தது.

நேற்று முதல் சவுண்ட் எபெக்ட்ஸ் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்த மாதத்திற்குள் அனைத்து பணிகளும் முடிவடைந்து அடுத்த மாதம் ஜில்லாவை ஆந்திராவில் வெளியிடும் வேலைகள் நடக்கிறது. ஆக, அஜித்தைத் தொடர்ந்து ஜில்லா விஜய்யும் ஆந்திரா செல்கிறார். 


Post your comment





Related News
மீண்டும் ஒரே நாளில் மோதும் தல - தளபதி..!
Inkem Inkem பாடல் புகழ் நாயகிக்கு தல, தளபதி இருவரில் யாரை பிடிக்கும் என்று தெரியுமா..?
தல, தளபதியை விடுங்க, வினோத் பார்வை இந்த முன்னணி நடிகர் மீது தானாம்..!
அஜித்தின் இந்த படங்கள் எல்லாம் விஜய்க்காக தயாரிக்கப்பட்டது தானா? இயக்குனரின் ஓபன்டாக்
ஜெயலலிதா மரணத்தில் அஜித்துக்கு நடந்தது இப்போ விஜய்க்கு - ரசிகர்கள் வருத்தம்.!
அஜித்தும் இல்லை, விஜயும் இல்லை, இயக்குனர் வினோத்தின் அடுத்த ஹீரோ இவரா? - வெளியான தகவல்.!
சிக்கலான நேரத்தில் விஜய்க்கு ஆதரவாக இறங்கிய பிரபல நடிகர்!
அஜித், விஜய்யை விட அதிக பட்ஜெட்டில் நடிக்கும் ராணா! கதை இதுதான்..
விஜய் ஆல்ரவுண்டர் ஆனால் அஜித்? - ஒத்த வார்த்தையில் சிவகார்த்திகேயன் பளீச் பதில்.!
அஜித், விஜய் சம்பளத்திற்கு செக் வைத்த விஷால் - இனி இப்படி தானா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions