பிறந்த நாளிலும் விஜய்யை எதிர்க்கும் அஜித் ரசிகர்கள்

Bookmark and Share

பிறந்த நாளிலும் விஜய்யை எதிர்க்கும் அஜித் ரசிகர்கள்

சமூக வலைத்தளங்களில் விஜய் ரசிகர்களுக்கும், அஜித் ரசிகர்களுக்குமான மோசமான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று விஜய் அவருடைய பிறந்த நாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் நாளிலும் அஜித் ரசிகர்கள் விஜய்க்கு எதிராக டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் புலி டீசரை விமர்சித்தும், விஜய் படங்களைப் பற்றி விமர்சித்தும் தரக்குறைவான பல கமெண்ட்டுகளையும், மீமீக்களையும் போட்டு வருகிறார்கள்.

#VijayTheCurseOfCinema என்ற ஒரு ஹேஷ்டேக்கை உருவாக்கி கடந்த சில மணி நேரங்களாக அதை இந்திய அளவில் டிரென்டிங்கிலும் வரவழைத்துவிட்டனர். சில கமெண்ட்டுகள் மிகவும் கூனிக் குறுகும் அளவிற்கு இருக்கிறது. பொதுவாக அஜித் படம் வெளிவந்தால் விஜய் ரசிகர்களும், விஜய் படம் வெளிவந்தால் அஜித் ரசிகர்களும் மோதிக் கொள்வதும் வழக்கமானதுதான். டீசர், டிரைலர் வெளிவந்தாலும் அவர்கள் இப்படித்தான் அடித்துக் கொள்வார்கள்.

ஆனால், பிறந்த நாளில் கூட அந்த சண்டையைத் தொடர்வது கேலிக்குரியதாகவே இருக்கிறது. அஜித் தன்னுடைய ரசிகர் மன்றங்களை எப்போதோ  களைத்து விட்டார். அப்படியே, இப்படி தரம் மீறி கமெண்ட்டுகளைப் போடும் தன்னுடைய ரசிகர்களையும் சேர்த்து கண்டிப்பார் என்று எதிர்பார்க்கலாம். இதனால் அவருடைய ரசிகர்களின் பெயரும் கெடுவது போதாதென்று அஜித்தின் பெயரும் சேர்ந்து கெட வாய்ப்புள்ளது.

உடனே அஜித் இதைக் கவனிப்பாரா என்பதே நடுநிலை ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions