யாரு பெஸ்ட்? தலயா? தளபதியா? - ஓப்பனாக பேசிய ஓவியா.!

Bookmark and Share

 யாரு பெஸ்ட்? தலயா? தளபதியா? - ஓப்பனாக பேசிய ஓவியா.!

தமிழ் சினிமாவில் சாதாரண நடிகையாக இருந்த ஓவியாவை சாதனை நாயகி என்னும் அளவிற்கு பிரபலமாக்கி விட்டது கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி.

இந்த நிகழ்ச்சியில் இருக்கும் போது சக போட்டியாளரான ஆரவ்வை காதலித்து வந்தார், ஆனால் ஆரவ் ஓவியாவின் காதலை மறுத்து விட்டதால் நிகழ்ச்சியில் இருந்து மனமுடைந்து வெளியேறினார்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்றில் மாடலிங்காக இருந்த எனக்கு களவாணி படத்தின் மூலம் தான் நடிகையாக வாய்ப்பு கிடைத்தது என கூறியிருந்தார். மேலும் தனக்கு தற்போது பார்ட்னராக நாய் குட்டி இருப்பதாகவும் கூறியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமாவில் தல தளபதி என இரண்டு பேருமே மாஸ் தான், எனக்கு இருவரையும் பிடிக்கும் என கூறியுள்ளார். அவர்களின் படங்களில் வாய்ப்பு கிடைத்தால் எந்த கதாபாத்திரத்தில் வேண்டுமானாலும் நடிப்பேன் என கூறியுள்ளார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions