அஜித், விஜய் சம்பளத்திற்கு செக் வைத்த விஷால் - இனி இப்படி தானா?

Bookmark and Share

அஜித், விஜய் சம்பளத்திற்கு செக் வைத்த விஷால் - இனி இப்படி தானா?

தயாரிப்பாளர் சங்க தலைவர், நடிகர் சங்க செயலாளர் என பல பதவிகளை வகித்து வருபவர் விஷால். இவரது தலைமையில் தற்போது தமிழ் சினிமாவில் ஸ்ட்ரைக் நடந்து வருகிறது, மேலும் தற்போது ஸ்ட்ரைக்கை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் விஷால் அதிரடியாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார், அதில் இனி எந்தவொரு நடிகரும் தன்னுடைய படத்தின் வசூலை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். தயாரிப்பாளர், விநோயோகிஸ்தர் இடையே ஒரு புரிதல் இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

படத்தின் வசூலை வெளிப்படையாக அறிவிப்பதால் அடுத்த படத்திற்கு சரியான சம்பளம் தான் கிடைக்கும். பெரிய நடிகர்கள் என்பதால் அதிக சம்பளம் கிடைக்காது. நடிகர்களின் திறமைக்கு ஏற்ற சம்பளம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions