அரசியல் களத்திலும் விஜய்க்கு போட்டியாக அஜித்

Bookmark and Share

அரசியல் களத்திலும் விஜய்க்கு போட்டியாக அஜித்

விஜய்யின் தலைவா படத்தில் Time to Lead என்று Caption போட்டதற்கே படத்தை பந்தாடிவிட்டார்கள், அரசியல் ஆசான்கள். அதன்பின் விஜய்யின் ஒவ்வொரு படமும் ஏதாவது

சர்ச்சையில் சிக்கி சக்கையாகி அதன்பின்பு தான் திரைக்கு வருகிறது. இந்நிலையில் அஜித், விரைவில் பிரபல அரசியல் கட்சியில் இணையவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அதுமட்டுமின்றி வேதாளம் படத்திற்கு பிறகு இவர் நடிக்கவிருக்கும் படம் அரசியல் சார்ந்த அதிரடி படமாக இருக்க வேண்டுமென்று விரும்புவதாகவும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே கலைஞருக்கு பாராட்டு விழா நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு “மிரட்டுறாங்கய்ய” என்ற ஒரு வார்த்தையை சொல்லி அஜித் ரசிகர்களிடையே பெரிய

பூகம்பத்தை ஏற்படுத்தினார். அந்த பிரச்சனை முடியவே பல நாட்கள் ஆகிவிட்டது. தேர்தலின் போது பிரச்சாரத்தில் அஜித் ரசிகர்கள் அஜித்தின் கொடியோடு சுற்றி சுற்றி கேமரா முன் வந்து போஸ் கொடுத்ததை பொறுக்க முடியாமல், நற்பணி மன்றத்தையே கலைத்தவர் அஜித். இந்நிலையில் இப்படி திடீர் முடிவெடுக்க என்ன காரணம் என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது.

காரணம், அஜித்துக்கு அரசியல் மீது நீண்ட நாட்களாகவே பெரிய நாட்டம் இருக்கிறதாம். ஷூட்டிங் இல்லாத நேரத்தில் சினிமா அல்லாத அவரது நண்பர்களுடன் பொழுதை கழிக்கும்போது அரசியல் சார்ந்த பல விஷயங்களை பகிர்ந்து கொள்வாராம்.

அதுமட்டுமின்றி இந்த அரசியல் ஆசைக்கு அஜித்தின் அப்பா பலமுறை முட்டுக்கட்டை போட்டும் அவர் அதை விடுவதாக இல்லையாம். இன்னும் 2 அல்லது 3 வருடங்களில் அஜித்தின் அரசியல் பிரவேசம் ஆரம்பித்துவிடும் என கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions