அஜித்தின் அடுத்த சென்டிமென்ட்!

Bookmark and Share

அஜித்தின் அடுத்த சென்டிமென்ட்!

கோலிவுட்டில் தயாராகும் அனைத்து படங்களுமே வெள்ளிக்கிழமைகளில் தியேட்டர்களுக்கு வருவதுதான் வாடிக்கை. ஆனால் அஜித் மட்டும் அதிலிருந்து மாறுபட்டு தனது படத்தை ஒருநாள் முன்னதாக அதாவது வியாழக்கிழமைகளில் வெளியிட்டு வருகிறார்.

அப்படி வியாழக்கிழமைகளில் வெளியாகும் படங்கள் வெற்றி பெறுவதால் அதை தொடர்ந்து பின்பற்றி வருகிறார் அஜித்.மேலும், தான் நடிக்கிற படங்களின் பூஜை, ஆடியோ ரிலீஸ் நாள், படம் வெளியாகும் நாள் என்று ஒவ்வொரு விசயத்திலும் வியாழக்கிழமைகளுக்கு முன்னுரிமை கொடுத்து வருகிறார் அஜீத்.

இந்த நிலையில், தற்போது சிவா இயக்கத்தில் தான் நடித்து வரும் 56வது படத்தில் விநாயகர் சென்டிமென்ட்டை கொண்டு வருகிறார் அஜித். அதாவது, முன்பு அஜித் நடித்த வான்மதி படத்தில் பிள்ளையார்பட்டி ஹீரோ நீதாம்பா கணேசா -என்றொரு பாடல் இடம்பெற்றது. அந்த படம் மெகா ஹிட்டானது.

அதன்பிறகு அமர்க்களம் படத்தில் காலம் கலிகாலம் ஆகிப்போச்சுடா, கம்ப்யூட்டர் கடவுளாக மாறிப்போச்சுடா என்ற பாடல் இடம்பெற்றது. அந்த படமும் அஜித்துக்கு ஹிட்தான். அந்த படத்திற்கு பிறகு அஜித்துக்கு ஸ்டார் வேல்யூ கிடைத்தது மட்டுமுன்றி, இப்போது அவரது மனைவியாக இருக்கும் ஷாலினியையும் அந்த படத்தில் நடித்தபோதுதான் காதலித்தார் அஜித்.

அதன்பிறகு அவர்களது காதல் கல்யாணத்தில் முடிந்தது. இப்படி வியாழக்கிழமை மட்டுமின்றி விநாயகரும் இப்போது அஜித்தின் சென்டிமென்ட்டாகி விட்டார். அதனால் 56 வது படத்தில் மீண்டும் ஒரு விநாயகர் பாடலை வைத்திருக்கிறாராம் அஜித்.

அந்த பாடல் ஒரு விநாயகர் சதுர்த்தி அன்று நடப்பது போன்று படமாக்கப்படுகிறதாம். இந்த பாடல் பாட்ஷா படத்தில், நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன் என்று ரஜினி விநாயகர் சதுர்த்தி விழாவில் பாடியது போன்று கொல்கத்தாவில் இந்த படத்துக்காக அஜித் பாடுவது போன்று படமாக்க உள்ளதாம்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions