அஜித்திற்கு வந்த மிரட்டல்... தேர்தலை புறக்கணித்த பின்னணி

Bookmark and Share

அஜித்திற்கு வந்த மிரட்டல்... தேர்தலை புறக்கணித்த பின்னணி

எந்த பொதுத்தேர்தல் வந்தாலும் க்யூவில் நின்று ஓட்டுப்போடும் வழக்கம் அஜித்திற்கு உண்டு. இப்படிப்பட்ட அவர்  நடிகர் சங்க தேர்தலுக்கு வராதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று இவர், ஓட்டுப்போட சுமார் 4 மணிக்கு வருவார் என ஒரு நம்பகமான தகவல்களும் பரப்பப்பட்டன. ஆனால் மாலை 5 மணி ஆகியும் அவர் வரவே இல்லை. இந்நிலையில் அஜித், கடந்த வாரமே இந்த தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை என்ற முடிவை எடுத்துவிட்டதாகவும் நடிகர் சங்கத்தின் மீதும், சக நடிகர்கள் மீதும் அவர் கடும் கோபத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

அன்றைய முதலமைச்சர் கருணாநிதி கலந்து கொண்ட சினிமா விழாவில் மேடையில் அஜித், “இந்த விழாவுக்கு வரலைன்னா அவ்வளவுதான்னு மிரட்டுறாங்கய்யா….” என்று பகிரங்கமாக ஒரு குற்றச்சாட்டை எடுத்து வைத்தார். இதற்கு அரங்கமே விசிலில் காது கிழிந்தாலும் முன் வரிசையில் உட்கார்ந்திருந்த பலரது முகம் கடு கடுவென இருந்தது, ஆனால் ரஜினியோ, அஜித் சொன்ன அந்த வார்த்தைக்காக முதல் ஆளாக எழுந்து நின்று கைத்தட்டினார்.

ஆனால் அதற்கப்புறம் வந்த நாட்கள் எதுவும் அஜித்திற்கு நிம்மதியானதாக இருக்கவில்லை. ஏகப்பட்ட மிரட்டல்கள். நேரிலும், போனிலுமாக அவரை மிரட்டிக் கொண்டேயிருந்தார்கள்.

இந்த சிக்கலில் மாட்டிக் கொண்டிருந்த அஜித்திற்கு ஒருவரும் உதவி செய்ய முன்வரவில்லை. அப்போது ரஜினிதான் அஜித்தை கலைஞரிடம் அழைத்து சென்று பிரச்சனைக்கு ஒரு தீர்வு காண வைத்தார்.

இதே நடிகர் சங்கமும், அதன் செயலாளர் ராதாரவியும் அஜித்திற்கு பக்கபலமாக இல்லாமல் தன் பங்குக்கு அவர்களும் இரண்டு கல்லை தூக்கிப் போட்டதாக கூறுகிறார்கள். சக நடிகர்களும் இளம் நடிகர்களும் கூட அஜித்திற்கு ஒரு போன் செய்து விசாரிக்கவில்லையாம்.

இதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு தான் இந்த தேர்தலை அவர் புறக்கணித்ததாக கூறுகிறார்கள்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions