ஹாலிவுட் ரீமேக் படத்தில் தல!

Bookmark and Share

ஹாலிவுட் ரீமேக் படத்தில் தல!

விஷ்ணுவர்தன் யட்சன் படத்தை அடுத்து அஜித்தை வைத்து இயக்க முடிவு செய்துள்ளார். இம்முறை வித்தியாசமான கதைக்களத்தில் அஜித்துடன் பயணிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஹாலிவுட்டில் பெரும் வசூலை குவித்த கார் ரேஸ் படம் ஒன்றினை தமிழில் ரீமேக் செய்ய முடிவு எடுத்துள்ளராம்.

இதுகுறித்து சமீபத்தில் அஜித் மற்றும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனர் ஆகியோருடன் விஷ்ணுவர்தன் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. இந்த படத்தின் திரைக்கதை கார் ரேஸ் குறித்து அமைந்துள்ளதால், உண்மையான கார் ரேஸ் வீரரான அஜித் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்றும் மேலும் இந்த படம் நெகட்டிவ் ஹீரோ சப்ஜெக்ட் என்பதால் அஜித்துக்கு மிகப்பொருத்தமாக இருக்கும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.

ஹீரோயின், பாடல்கள் இல்லாமல் ஹாலிவுட் ஸ்டைலில் ஒன்றரை மணி நேரத்தில் இந்த படம் அமையும் வகையில் உருவாக்க போவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படத்தின் அறிவிப்பு வெகுவிரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions