‘விவேகம்’ படத்தில் அஜித் சாதனை பாடல்

Bookmark and Share

‘விவேகம்’ படத்தில் அஜித் சாதனை பாடல்

அஜித் நடிப்பில் உருவாகிவரும் புதிய படம் ‘விவேகம்’. இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். காஜல் அகர்வால், அக்ஷராஹாசன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர். விவேக் ஓபராய் வில்லனாக நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் முடிவடைந்து, இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்நிலையில், இப்படத்தில் அஜித் கடந்த 25 ஆண்டுகளாக சினிமாவில் கடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கும் வகையில் ‘தீம்’ பாடல் ஒன்று இடம் பெறுகிறதாம்.

இதில் அவருடைய சாதனைகள் பற்றிய வரிகள் உள்ளன. இந்த பாடலுக்காக அனிருத் பல ராகங்களை போட்டு காட்ட, அதில் ஒரு ராகத்தை அஜித் தேர்ந்தெடுத்துள்ளாராம். அது ‘தீம்’ பாடலாக உருவாகி இருக்கிறதாம்.

அதிரடி இசையில் உருவாகி இருக்கும் இந்த பாடல் பட்டிதொட்டி எல்லாம் ஒலிக்கும் என்று அனிருத் அடித்துச் சொல்கிறார்.இதற்கிடையில், வருகிற 19-ந் தேதி விவேகம் படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை வெளியிடப்போவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளார்.

அதற்கான டீசரை இன்று படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அநேகமாக, அஜித்தின் சாதனைகளை சொல்லும் பாடலாக அதுவாகத்தான் இருக்குமோ? என்ற ஐயமும் கோலிவுட் வட்டாரத்தில் எழுந்துள்ளது.  


Post your comment





Related News
எனக்கு பிடித்த நடிகர் இவர் தான், தல தளபதி எல்லாம்? - அனுஷ்கா ஓபன் டாக்.!
விஸ்வாசம் படத்தில் மெகா ஹிட் நாயகியா? - வைரலாகும் சூப்பர் தகவல்.!
ஜல்லிக்கட்டில் தல அஜித் ரசிகர் செய்த வேலை - வைரலாகும் அட்டகாசமான புகைப்படம்.!
யார் பெஸ்ட் அண்ட் பேவரைட் தலயா? தளபதியா? - ஓவியாவின் பளிச் பதில்
நட்சத்திர கலை விழா பற்றி கூறிய தல அஜித்துக்கு ஜெயம் ரவியின் அதிரடி பதில்.!
தல அஜித்தின் பைக்கை திருட ஸ்கெட்ச் போடும் பிரபல நடிகர் - யார் தெரியுமா?
பொங்கலுக்காக தல ரசிகர்கள் செய்த வேலை - வைரலாகும் மாஸ் புகைப்படம்.!
விஸ்வாசம் டீஸர் தேதி, இசையமைப்பாளர் அறிவிப்பு - வைரலாகும் புகைப்படம்
அஜித் சொன்னதை தவறாக கொண்டு வந்துட்டாங்க- முன்னணி நடிகர் ஓபன் டாக்
சென்ற வருடத்தின் No.1 ஆல்பம், மெர்சலா? விவேகமா? - அதிகாரபூர்வ அறிவிப்பு.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions