மீண்டும் அஜித் ஸ்டைலை பின்பற்றும் விவேக்

Bookmark and Share

மீண்டும் அஜித் ஸ்டைலை பின்பற்றும் விவேக்

காமெடி நடிகர் விவேக், அஜித்துடன் இணைந்து நடித்திருந்த ‘என்னை அறிந்தால்’ படத்தில் அஜித்தைப் போலவே சால்ட் அன்ட் பெப்பர் தலைமுடி மற்றும் தாடியுடன் வந்து காமெடியில் கலக்கினார். அதன்பிறகு, ஜெயம் ரவியுடன் இவர் இணைந்து நடித்த ‘அப்பாடக்கர்’ படத்தில் மொட்டைத் தலையுடன் நடித்து முடித்துள்ளார்.

இதையடுத்து, மீண்டும் சால்ட் அன்ட் பெப்பர் ஸ்டைலுக்கு மாறியுள்ளார் விவேக். கார்த்தி நடிக்கவிருக்கும் ‘கஸ்மோரா’ படத்தில்தான் விவேக் சால்ட் அன்ட் பெப்பர் ஸ்டைலில் நடிக்கவிருக்கிறார். இந்த புகைப்படத்தை தற்போது டுவிட்டரில் விவேக் வெளியிட்டுள்ளார்.

கஸ்மோரா படத்தை ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தை இயக்கிய கோகுல் இயக்கவிருக்கிறார். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவிருக்கிறார் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவிருக்கிறார். விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.  


Post your comment





Related News
வெளிநாடுகளில் வேற லெவலில் கலக்கிய விவேகம் - முழு வசூல் விவரம் இதோ.!
அஜித் பரிசு கொடுத்த கடிகாரத்தில் பிழை: காமெடி நடிகர் விவேக்
அஜித் எனக்கு கொடுத்த பரிசில் பிழை இருக்கிறது- விவேக்கின் அதிரடி டுவிட்
அஜித் மிகவும் நல்ல மனிதர்- இது பாலிவுட் நடிகரின் கருத்து
அஜித் ஒன் அண்ட் ஒன்லி சூப்பர் ஸ்டார் : விவேக் ஓபராய்
ரிவால்வர் ரிச்சர்ட் ... இதுதான் அஜீத் படத்தில் விவேக்கின் பெயர்
இந்தோ-சீனா எல்லையில் அஜீத் படத்தின் படப்பிடிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions