அஜித் பரிசு கொடுத்த கடிகாரத்தில் பிழை: காமெடி நடிகர் விவேக்

Bookmark and Share

அஜித் பரிசு கொடுத்த கடிகாரத்தில் பிழை: காமெடி நடிகர் விவேக்

காமெடி நடிகர் விவேக், அஜித்துடன் ‘காதல் மன்னன்’, ‘வாலி’, ‘என்னை அறிந்தால்’ உள்ளிட்ட பல படங்களில் இணைந்து நடித்துள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளத்தில் விவேக்குக்கு அஜித் கொடுத்த பரிசு குறித்த செய்தியை வைரலாக பரவி வருகிறது.

அதாவது ஒருமுறை அஜித்தும், விவேக்கும் காரில் பயணம் செய்துகொண்டிருந்த போது, அஜித் கையில் இருந்த ரோலக்ஸ் வாட்ச் விவேக்கை ரொம்பவும் கவர்ந்துள்ளதாகவும், அந்த வாட்சின் அழகை பார்த்து வியந்துபோன விவேக், என்றாவது தானும் அதுபோன்ற ஒரு வாட்சை வாங்குவேன் என்று அஜித்திடம் கூறினாராம்.

உடனே அஜித் சற்றும் யோசிக்காமல் கையில் இருந்த வாட்சை கழற்றி விவேக்கில் கையில் கொடுத்துவிட்டாராம். இதைப் பார்த்து விவேக் எதுவும் பேசமுடியாமல் ஆனந்த கண்ணீர் வடித்தாராம். இதுகுறித்து ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த விவேக், அந்த செய்தியில் கூறியபடி எதுவும் நடக்கவில்லை.

ஆனால், அது இப்போது பெரிய விஷயமில்லை.அந்த செய்தியில் ஒரு டெக்னிக்கல் பிழை உள்ளது. அஜித் எனக்கு பரிசாக கொடுத்தது ரோலக்ஸ் அல்ல, செய்கே (Seiko) வாட்ச் என்று கூறியுள்ளார். அஜித்தின் சிறந்த மனிதர் என்பதற்கு இதுவும் சான்று என்றும் தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
வெளிநாடுகளில் வேற லெவலில் கலக்கிய விவேகம் - முழு வசூல் விவரம் இதோ.!
அஜித் எனக்கு கொடுத்த பரிசில் பிழை இருக்கிறது- விவேக்கின் அதிரடி டுவிட்
அஜித் மிகவும் நல்ல மனிதர்- இது பாலிவுட் நடிகரின் கருத்து
அஜித் ஒன் அண்ட் ஒன்லி சூப்பர் ஸ்டார் : விவேக் ஓபராய்
மீண்டும் அஜித் ஸ்டைலை பின்பற்றும் விவேக்
ரிவால்வர் ரிச்சர்ட் ... இதுதான் அஜீத் படத்தில் விவேக்கின் பெயர்
இந்தோ-சீனா எல்லையில் அஜீத் படத்தின் படப்பிடிப்பு







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions