எனக்கு எதுவோ, அதுதான் எல்லோருக்கும்! மனம் நெகிழ வைத்த அஜீத்!

Bookmark and Share

எனக்கு எதுவோ, அதுதான் எல்லோருக்கும்! மனம் நெகிழ வைத்த அஜீத்!

கோடம்பாக்கமே கலவர பூமியாகிக் கிடந்தாலும் டென்ஷனே ஆகாமல் தன் வீட்டு செடிக்கு தண்ணீர் பாய்ச்சுவதில், அஜீத்தின் நிதானத்திற்கு நிகர் அவரேதான்!

அந்த ஹீரோ என்ன செய்கிறார்?

இந்த ஹீரோவுக்கு என்ன பிரச்சனை? என்றெல்லாம் அலட்டிக் கொள்ளாமல் தன் லட்சியத்தை மிக சிறப்பாக நடத்தி முடித்துவிட்டார். 

தன் வீட்டு பணியாளர்களுக்கு வீடு கட்டித் தருவதாக பிளான் போட்டிருந்தார் அல்லவா? அதை சிறப்பாக நடத்தி முடித்து அதில் அவர்களை குடியமர்த்தியும் விட்டார் என்பது அனைவரும் அறிந்தது.

அஜீத்தின் நீலாங்கரை வீட்டுக்கும், பணியாளர்கள் வீட்டிற்கும் இடையேயான தொலைவு சுமார் பத்து கிலோ மீட்டருக்கும் மேல்.  அதனால் தினந்தோறும் ஒரு வேன் அவர்களை அழைத்து வரவும் திரும்ப கொண்டு செல்லவும் அமர்த்தப்பட்டுள்ளது.  

ஒருநாள் வேன் லேட்! பதறியடித்துக் கொண்டுவந்த பணியாளர்கள், அஜீத்திடம் ஸாரி கேட்டுவிட்டு தாமதத்திற்கான காரணத்தையும் சொன்னார்களாம். “நேத்து இரவு முழுக்க மின்சாரம் இல்ல. சரியா தூங்கவில்லை. அதனால்தான்” என்று சொல்ல, பதறிவிட்டாராம் அஜீத்.

“எல்லார் வீட்டுக்கும் இன்வெட்டர் ( மின்சார பேக்கப்) போடச் சொல்லியிருந்தேனே, இன்னும் பிக்ஸ் பண்ணலையா?” என்றவர், சம்பந்தப்பட்டவர்களை அழைத்து “உடனே இன்வெட்டர் போட்ருங்க.

அதுவும் என் வீட்டுக்கு என்ன பிராண்ட் போட்ருக்கீங்களோ, அதையே போடுங்க. இல்லேன்னா சார் வீட்டுல ஒண்ணு. நமக்கு வேற ஒண்ணான்னு அவங்க பீல் பண்ணிடக் கூடாது” என்று கூறியிருக்கிறார். 

நல்ல விஷயம், நல்ல பழக்கவழக்கத்தை நாலு பேருக்கு ஷேர் பண்றதுல தப்பிலையே! 


Post your comment





Related News
அஜித்திற்கு மேலும் ஒரு வில்லனா?
பாகுபலி-2விற்கே போட்டியாக அமைந்த தல படம்- ரசிகர்கள் கொண்டாட்டம்
அஜித்துக்கு செம டைட்டில் கொடுத்த பிரபல இயக்குனர்!
கும்பக்கோணம் தீவிபத்தின் போது அஜித் என்ன செய்தார் தெரியுமா?
அஜித்தும், விஜய்யும் சேர்ந்து சாப்பிடுவார்கள் - மனம் திறந்த பிரபல இயக்குனர்
அஜித் கால்ஷிட்டையே சூழ்ச்சியில் பெற்றவர் முருகதாஸ், அவருடைய சொந்த கதை ஏதுமில்லை- வெளுத்து வாங்கிய இயக்குனர்
Tag கிரியேட் செய்வதிலும் புதுமையை காட்டிய அஜித் ரசிகர்கள்- தல பிறந்தநாள் கொண்டாட்டம் வேறலெவல்
ஹெலிகாப்டருடன் அஜித் நிற்கும் புதிய விவேகம் புகைப்படம் உள்ளே
அஜித் படங்களுக்கு இப்படி ஒரு வரவேற்பா? அசந்த திரையரங்கம், மேலும் ஒரு சர்ப்ரைஸ்
கடும் அச்சத்தில் விவேகம் பட தயாரிப்பாளர்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions