தமிழில் ஹிட் கொடுக்கத் துடிக்கும் அஜ்மல்!

Bookmark and Share

தமிழில் ஹிட் கொடுக்கத் துடிக்கும் அஜ்மல்!

தமிழில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஜீவா நடித்த கோ படத்தில் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடித்தவர் அஜ்மல். அந்த படத்தில் ஜீவாவை விட இவரது கேரக்டரே கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்தாக அமைந்தது. அதனால் அடுத்தபடியாக சில படங்களில் ஹீரோவாக கமிட்டானார் அஜ்மல்.

அவர் ஹீரோவாக நடித்து கருப்பம்பட்டி, வெற்றிச்செல்வன் ஆகிய படங்கள் வெளியாகின. ஆனால் இரண்டுமே வெற்றி பெறாததால் அதற்கடுத்து அவர் நடித்துக்கொண்டிருந்த கதிர்வேல், உலா போன்ற படங்கள் கிடப்பில் கிடக்கின்றன.

அதேசமயம், தெலுங்கில் அஜ்மலுக்கு மார்க்கெட் சீராக உள்ளது. கடந்த ஆண்டுகூட அவர் நடித்த ப்ரபன்ஜனம் என்ற படம் ஹிட்டடித்துள்ளதாம்.

இந்நிலையில், தமிழிலும் எப்படியேனும் மார்க்கெட்டை பிடித்து விட வேண்டும் என்று துடிக்கும் அஜ்மல், தற்போது ரோமியோ ஜூலியட் படத்தை இயக்கிய லட்சுமணிடம் தன்னை வைத்து ஒரு படம் இயக்குமாறு கேட்டுக்கொண்டதோடு, அந்த படத்திற்கு சரியான தயாரிப்பாளர்கள் கிடைக்காததால், தனது நண்பர் ஒருவரையே பைனான்ஸ் செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளாராம். அந்த வகையில், அஜ்மல் அடுத்து நடிக்கும் படம் 2 கோடி பட்ஜெட்டில் தயாராகயிருப்பதாக கூறப்படுகிறது.


Post your comment





Related News
ஹீரோவாகத்தான் நடிப்பேன்”, அடம் பிடிக்கும் அஜ்மல்
கேரள ஐ.பி.எல் கிரிக்கெட் டீமை வாங்கும் முயற்சியில் இறங்கிய அஜ்மல்..!
மீண்டும் மோகன்லாலுடன் கூட்டணி சேர்ந்தார் அஜ்மல்..!
நழுவவிட்ட விஜய் எட்டிப் பிடித்த அஜ்மல்!
முத்த காட்சி நடிக்க மறுத்த நடிகர்: 2மணி நேரம் ஷுட்டிங் தாமதம்.!
அஜ்மல் போடும் வில்லங்கமான‌ கண்டிஷன்..!
கோ படத்தால் தெலுங்கில் பிரபலமான‌ நடிகர் அஜ்மல்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions