கேரள ஐ.பி.எல் கிரிக்கெட் டீமை வாங்கும் முயற்சியில் இறங்கிய அஜ்மல்..!

Bookmark and Share

கேரள ஐ.பி.எல் கிரிக்கெட் டீமை வாங்கும் முயற்சியில் இறங்கிய அஜ்மல்..!

தமிழில் 'அஞ்சாதே' படம் மூலம் பிரபலமானவர் அஜ்மல்.. மேலும் தமிழில்,  'திருதிரு துறுதுறு' மற்றும் 'கோ' என நல்லபடங்களை கவனமாக தேர்ந்தெடுத்து நடித்ததன் மூலம் ஒரு வெற்றிகரமான நடிகராக வளருவார் என எதிர்பார்த்தபோது வெற்றிச்செல்வன், கருப்பம்பட்டி படங்களில் சறுக்கினார்.

கேரளாவை சேர்ந்தவராக இருந்தாலும் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மாறி மாறி நடித்துவரும் அஜ்மல் ஒரு சிறிய இடைவெளிக்குப்பின் 'லோஹம்' படம் மூலமாக மலையாள சினிமாவிற்கு திரும்பியிருக்கிறார்.

மோகன்லால் ஹீரோவாக நடிக்கும் இந்தப்படத்தை ரஞ்சித் இயக்குகிறார். இதில் அஜ்மலுக்கு தமிழ்நாட்டை சேர்ந்த இளம் அரசியல்வாதி வேடமாம். தமிழ்நாட்டு நிதி அமைச்சரின் மகனாக நடிக்கும் இவருக்கு எம்.பி.ஆகவேண்டும் என்பது கனவாம்..

அதுதவிர பிரபலமாக ஏதாவது செய்யவேண்டும் என்பதால் கேரளாவுக்கு சென்று ஐ.பி.எல் கிரிக்கெட் டீமை வாங்கும் முயற்சியில் ஈடுபடுவாராம்.. இவரது கேரக்டர் தமிழன் என்பதால் இவரே தனக்காக தமிழில் டப்பிங்கும் பேசியுள்ளாராம்.

அஜ்மல் ஏற்கனவே மோகன்லாலுக்கு தம்பியாக 'மாடம்பி' என்கிற படத்தில் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..


Post your comment





Related News
ஹீரோவாகத்தான் நடிப்பேன்”, அடம் பிடிக்கும் அஜ்மல்
தமிழில் ஹிட் கொடுக்கத் துடிக்கும் அஜ்மல்!
மீண்டும் மோகன்லாலுடன் கூட்டணி சேர்ந்தார் அஜ்மல்..!
நழுவவிட்ட விஜய் எட்டிப் பிடித்த அஜ்மல்!
முத்த காட்சி நடிக்க மறுத்த நடிகர்: 2மணி நேரம் ஷுட்டிங் தாமதம்.!
அஜ்மல் போடும் வில்லங்கமான‌ கண்டிஷன்..!
கோ படத்தால் தெலுங்கில் பிரபலமான‌ நடிகர் அஜ்மல்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions