ஹீரோவாகத்தான் நடிப்பேன்”, அடம் பிடிக்கும் அஜ்மல்

Bookmark and Share

ஹீரோவாகத்தான் நடிப்பேன்”,  அடம் பிடிக்கும் அஜ்மல்

நல்லவனாக இருந்து வில்லனாக மாறும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் மிஷ்கின் இயக்கிய அஞ்சாதே படத்தில் நடித்தவர் அஜ்மல். அடுத்து தநா 07 அல 4777, திரு திரு துறு துறு ஆகிய படங்களில் நாயகனாக நடித்தார்.

இருந்தாலும் கோ படத்தில் வில்லனாக நடித்த பிறகுதான் அவரை ரசிகர்களுக்கும் நன்றாக அடையாளம் தெரிய ஆரம்பித்தது. அதன் பின் தமிழில் அவர் நடித்த கருப்பம்பட்டி, வெற்றிச் செல்வன் ஆகிய படங்களும் வெற்றி பெறவில்லை.

இடையில் தெலுங்கு, மலையாளம் என மற்ற மொழிகளிலும் நடிக்க ஆரம்பித்தார். எனினும், தமிழில் ஒரு முக்கிய இடத்தைப் பிடிப்பதே தனது லட்சியம் என்கிறார் அஜ்மல். “அஞ்சான், கோ ஆகிய படங்களில் இயக்குனர்களுக்காகத்தான் வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நடித்தேன். கோ படத்தைப் பொறுத்தவரையில் எனக்குத்தான் முக்கியத்துவம் அதிகம். நான்தான் படத்தில் ஹீரோவாகத் தெரிவேன்.

என்னைச் சுற்றிதான் படத்தின் கதையே நகரும். அதனால் அந்தப் படத்தில் அப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதித்தேன். இப்போது வெளிவந்துள்ள தனி ஒருவன் படத்தில் கூட அரவிந்த் சாமி நடித்துள்ள கதாபாத்திரத்தில் நடிக்க எனக்குத்தான் முதலில் வாய்ப்பு வந்தது.

ஆனால், நான் வில்லனாக நடிக்க சம்மதிக்கவில்லை. தமிழில் இனி நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன். வேறொருவர் படங்களில் வில்லனாக நடித்து என்னை தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை.

சிறு வயதிலிருந்தே தமிழ் சினிமா மீது அப்படி ஒரு ஆர்வம் எனக்கு. சில நல்ல கதைகளைக் கேட்டு வைத்துள்ளேன். விரைவில் அது பற்றிய அறிவிப்புகள் வெளியாகும்”,  என்கிறார் அஜ்மல்


Post your comment





Related News
தமிழில் ஹிட் கொடுக்கத் துடிக்கும் அஜ்மல்!
கேரள ஐ.பி.எல் கிரிக்கெட் டீமை வாங்கும் முயற்சியில் இறங்கிய அஜ்மல்..!
மீண்டும் மோகன்லாலுடன் கூட்டணி சேர்ந்தார் அஜ்மல்..!
நழுவவிட்ட விஜய் எட்டிப் பிடித்த அஜ்மல்!
முத்த காட்சி நடிக்க மறுத்த நடிகர்: 2மணி நேரம் ஷுட்டிங் தாமதம்.!
அஜ்மல் போடும் வில்லங்கமான‌ கண்டிஷன்..!
கோ படத்தால் தெலுங்கில் பிரபலமான‌ நடிகர் அஜ்மல்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions