பிருத்விராஜ் ஜோடியானார் அகன்ஷா பூரி!

Bookmark and Share

பிருத்விராஜ் ஜோடியானார் அகன்ஷா பூரி!

இயக்குனர் பேரரசு மலையாளத்தில் இயக்கிய சாம்ராஜ்யம்-2 சன் ஆப் அலெக்சாண்டர் படம் சரியாக போகவில்லை என்கிற வருத்தத்தை கிளறுவதைவிட, அதில் கதாநாயகியாக, மிடுக்கான போலீஸ் அதிகாரியாக நடித்து பிரமிப்பை ஏற்படுத்திய அகன்ஷா பூரியை பற்றி பேசுவதுதான் சரியாக இருக்கும். மம்முட்டியின் பிரைஸ் தி லார்ட் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான இவரது கனவு நாயகன் யாரென்றால், அது பிருத்விராஜ் தானாம். இப்போது கனவு நனவானது போல் பிருத்விராஜின் ஜோடியாக நடிக்க வாய்ப்பும் கிடைத்துவிட்டது இவருக்கு. 

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் குணச்சித்திர நடிகராக வலன் வரும் நாதிர்ஷா இயக்கத்தில், பிருத்விராஜ், ஜெயசூர்யா, இந்திரஜித் மூவரும் இணைந்து நடிக்கும் அமர் அக்பர் ஆண்டனி படத்தில் அமராக நடிக்கும் பிருத்விராஜுக்கு அகன்ஷா தான் ஜோடி. அமர், அக்பர், ஆண்டனி மூவருக்குமான விறுப்பு, வெறுப்புகள் தான் கதை. இந்த மூவர் வசிக்கும் காலனியில் தங்கியுள்ள எளிமையான பெண்ணாக நடிக்கிறார் அகன்ஷா பூரி. இவர் தவிர நமீதா பிரமோத் மற்றும் சிருந்தா ஆசப் என இன்னும் இரண்டு ஹீரோயின்களும் உண்டு. 


Post your comment





Related News
குட்டை பாவாடை மட்டும் போட்டால் போதாது, மஹத் தான் வில்லன்: பிக்பாஸ் முதல் சீசன் போட்டியாளர் பளீர்
சாம் C S இசையில் யுவன் ஷங்கர் ராஜா..!
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வையாபுரிக்கு அடித்த யோகம் - புகைப்படம் உள்ளே.!
பிக் பாஸ் பிரபலங்களின் கவர்ச்சி ஆடைகளுக்கு யார் காரணம்? - வையாபுரி பரபர பேட்டி.!
நடிகர் ஓம் பூரியை மோடி கொன்றுவிட்டார்: பாகிஸ்தான் டிவி சேனல்
விஜய்க்கு போட்டியாக களம் இறங்கிய விஜய் சேதுபதி!
புரியாத புதிர் தெலுங்கு உரிமம் விற்பனையானது!
ராணுவ வீரர்களை அவமதித்ததாக நடிகர் ஓம் புரி மீது போலீசில் புகார்
பாகிஸ்தான் நடிகர்கள் முறையான விசாவுடன் தான் வருகிறார்கள்: இந்தி நடிகர் ஓம் புரி
பெண்ணின் நிர்வாண பட சர்ச்சையில் இயக்குநர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions