மராத்தி வெற்றிப்படம் தெலுங்கில் வெற்றி பெறுமா?

Bookmark and Share

மராத்தி வெற்றிப்படம் தெலுங்கில் வெற்றி பெறுமா?

டோலிவுடின் வெற்றிப் பட இயக்குநர் பூரி ஜெகன்நாத்தின் மகன் ஆகாஷ் பூரி, ரிஷி புகழ் இயக்குநர் ராஜ் முதிராஜு இயக்கி வரும் ஆந்திரா பொறி படத்தின் மூலம் தெலுங்கு உலகில்  நாயகனாக அறிமுகம் ஆகிறார்.

தமிழில் பிரகாஷ் ராஜ் நடிப்பில் வெளியான தோனி படத்தில் அவரது மகனாக நடித்த ஆகாஷ் பூரி பல தெலுங்கு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். மராத்தியில் வெளியான டைம் பாஸ் என்ற படத்தை தழுவி ஆந்திரா பொறி எடுக்கப்பட்டுள்ளதாக் கூறப்படுகின்றது.

நாயகனின் முதல் காதலை மையப்படுத்திய டைம் பாஸ் படம் மராத்தியில் வெற்றிப் படமாக அமைந்தது. அதே பாணியில் எடுக்கப்பட்டுள்ள ஆந்திரா பொறி படம் தெலுங்கிலும் வெற்றி பெறும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இப்படத்தில் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞன் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணை காதலிக்கின்றார். அதனால் ஏற்படும் பிரச்னைகளும் காதல் போராட்டங்களுமே இப்படம் என டோலிவுட் வட்டாரத்தில்  கூறப்படுகின்றது.

மேலும் இப்படத்தின் தலைப்பு குறித்தும் பிரச்னை உள்ளது.இந்த விவகாரம் தொடர்பான வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
இந்து கடவுள்கள் மீது அவதூறு - பிரகாஷ் ராஜ் மீது வழக்கு
குட்டை பாவாடை மட்டும் போட்டால் போதாது, மஹத் தான் வில்லன்: பிக்பாஸ் முதல் சீசன் போட்டியாளர் பளீர்
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
சாம் C S இசையில் யுவன் ஷங்கர் ராஜா..!
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
தன்னுடைய இயல்பான நடிப்பால் என் வேலையை எளிதாக்கிய இந்துஜா - இயக்குனர் ஆர் கண்ணன்!
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
சார்லி சாப்ளின் 2 படத்திற்காக செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி பாடிய முதல் பாட்டு
பிரேமம் அனுபமாவுக்கு ஏற்பட்ட சோகம்! எதிர்பாராத நிகழ்வு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions