நடிப்பா? படிப்பா? லட்சுமி மேனன் பாணியில் குழம்பிய ஹீரோ

Bookmark and Share

நடிப்பா? படிப்பா? லட்சுமி மேனன் பாணியில் குழம்பிய ஹீரோ

‘கும்கி’ லட்சுமி மேனன்  பிளஸ் 2 படித்தபடியே நடித்து வந்தார். தேர்வு நெருங்கியதையொட்டி ஷூட்டிங்கிலிருந்து விடுமுறை எடுத்துக்கொண்டு படிப்பில் கவனம் செலுத்தினார்.

இதற்கிடையில் அஜீத் நடிக்கும் படத்தில் தங்கை வேடம் உள்பட வேறு ஹீரோக்களுடன் ஜோடியாக நடிக்கவும் வாய்ப்பு வந்தது. சமீபத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது. லட்சுமி மேனன் பிளஸ் 2 தேர்வில் பெயிலாகிவிட்டார் என இணைய தள வாட்ஸ் அப்களில் தகவல் பரவியது.

இதுபற்றி லட்சுமிமேனன் தரப்பில் கூறும்போது, ‘லட்சுமிமேனன் சிபிஎஸ்இ பள்ளியில் படித்து தேர்வு எழுதினார். அதற்கான ரிசல்ட் இனிமேல்தான் வரும்’ என்று ஒருவரியில் பதிலை முடித்துக்கொண்டனர்.

இதேபோல் ஒரு சூழல் டோலிவுட் இயக்குனர் புரி ஜெகநாத் மகன் அகஷ் புரிக்கு ஏற்பட்டது. பிரகாஷ் ராஜ் தயாரிக்கும் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. படித்துக் கொண்டிருந்ததால் சம்மதம் சொல்லாமல் இருந்தார்.

கதையை கேட்கும்படி தந்தை புரி ஜெகநாத் கூறினார். கதை பிடித்திருக்கவே நடிப்பா? படிப்பா? என்ற குழப்பத்தில் ஆழ்ந்தார். இதுபற்றி அகஷ் கூறும்போது,‘நடிக்க வந்தால் படிக்க முடியாது என்பது எனக்கு தெரியும். எனக்கோ சினிமாவை தவிர வேறு எதுவும் தெரியாது. நடிப்புக்காக படிப்பை பாதியில் நிறுத்திவிட்டேன்’ என்றார். 

 


Post your comment





Related News
பாலியல் தொல்லையில் சிக்கிய நடிகைகளுக்கு எதிராக செயல்படுவதா? - பிரகாஷ்ராஜ் ஆவேசம்
கனவு நினைவானது - ரஜினியை சந்தித்த மகிழ்ச்சியில் மேகா ஆகாஷ்
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
இந்து கடவுள்கள் மீது அவதூறு - பிரகாஷ் ராஜ் மீது வழக்கு
குட்டை பாவாடை மட்டும் போட்டால் போதாது, மஹத் தான் வில்லன்: பிக்பாஸ் முதல் சீசன் போட்டியாளர் பளீர்
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
சாம் C S இசையில் யுவன் ஷங்கர் ராஜா..!
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
தன்னுடைய இயல்பான நடிப்பால் என் வேலையை எளிதாக்கிய இந்துஜா - இயக்குனர் ஆர் கண்ணன்!
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions