தாய்லாந்தில் சண்டையிட்டு முடித்த அகில்

Bookmark and Share

தாய்லாந்தில் சண்டையிட்டு முடித்த அகில்

பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா  மற்றும் நடிகை அமலாவின் மகன்  அகில் நாயகனாக அறிமுகமாகும் தெலுங்கு திரைப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளன. இயக்குனர் விவி விநாயக் இயக்கும் இப்படத்தில் அகிலுக்கு ஜோடியாக நடிகை சேஷா சைகள் நடித்து வருகின்றார்.

நிதின் பெரும்  பொருட் செலவில் இப்படத்தை தயாரித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்புகள் ஹைதராபத்தில் துவங்கி பேங்காங், தாய்லாந்த் போன்ற நாடுகளில் நடைபெற்றன. அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்புகள் தாய்லாந்தில் நடைபெற்றன.

அகில் பங்கேற்ற அதிரடி சண்டைக் காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டுள்ளன. தற்போது தாய்லாந்த் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. விரைவில் படக்குழுவினர் ஹைதராபாத் திரும்பவுள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் 70% நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இன்னும் இரண்டு மாதங்களில் இப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவு பெறும் எனவும் படப் பிடிப்பு தள தகவல்கள் தெரிவிக்கின்றன. 


Post your comment





Related News
கஜா புயல் பாதிப்பு - ஓசையில்லாமல் உதவிய விஜய், மக்கள் இயக்க நிர்வாகிகள் பேட்டி
சூப்பர் ஸ்டாராக கலக்கிய விஜய் சேதுபதி
96 ரீமேக்கில் அல்லு அர்ஜுன்
அருண் விஜய்யின் அடுத்த படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி
அதோ அந்த பறவை போல டப்பிங்கில் பிசியான அமலாபால்
பிரபுதேவா எனது குரு - இந்துஜா
திருமணத்திற்கு பின் நமீதாவின் அகம்பாவம்
இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.!
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions