அகிலுடன் டூயட் ஆடப்போகும் நடிகை இவர் தான்

Bookmark and Share

அகிலுடன் டூயட் ஆடப்போகும் நடிகை இவர் தான்

அகினேனி குடும்பத்திலிருந்து அடுத்த வாரிசும் ஹிரோவாக அறிமுகமாகிறார். நாகார்ஜுனாவின் மகனான அகில் தற்போது பெயரிடப்படாத புதிய படத்தின் மூலம் டோலிவுட்டில் அறிமுகமாகப்போகிறார்.

ஸ்ரேஷ்டா மூவிஸ் சார்பில் நடிகர் நிதின் தயாரிப்பில் இயக்குநர் வி.வி.வினாயக் இயக்கத்தில் அகில் நடிக்கவிருக்கிறார். இப்படத்திற்கு கதை எழுதியிருக்கிறார் வெலிகோண்டா ஸ்ரீனிவாஸ்.

சமீபத்தில்தான் இந்த படத்திற்கான பூஜை போடப்பட்டது. அகிலுக்கு ஜோடியாக புதுமுக நடிகையை தேடிக் கொண்டிருந்த படக்குழு தற்போது நாயகி யார் என்று அறிவித்துள்ளார்கள்.

பாலிவுட் நடிகர் திலீப் குமாரின் நெருங்கிய உறவுக்கார பெண்ணான சயீஷா சய்கல் தான் அவர். தற்போது பாலிவுட்டில் அஜய் தேவ்கானுடன் ஷிவாய் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் இவர் டோலிவுட்டில் அகிலுடன் இணைந்து அறிமுகமாகப்போகிறார்.

பிப்ரவரி 14 ஆம் தேதி ஹைதராபாத்திலுள்ள ஷில்பா கலா வேதிகா அரங்கத்தில் இப்படத்தின் அறிமுக விழா பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கிறதாம். இதில் பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டு அகினேனி அகிலை வாழ்த்தப்போகிறார்களாம். 


Post your comment





Related News
அகில் நடனத்தால் ரசிகர்களை கவர்ந்திழுப்பார் : நாகார்ஜுனா
சூடுபிடிக்கும் அகில் படம் !
படப்பிடிப்பு முடியும் தருவாயில் அகில்!
அகில் விடும் சவால் முன்னணி நடிகர்களுக்கு!
தாத்தா பிறந்தநாளில் பேரன் பட பாடல் வெளியீடு!
தாய்லாந்தில் சண்டையிட்டு முடித்த அகில்
சேஷா சைகலுடன் டூயட் பாடும் அகில்
பேங்காங்க்கில் சண்டையிடும் அகில்!
நடிகையை கடித்த நாய்!
மெகா பவர் ஸ்டாருடன் மோதும் அறிமுக நடிகர்....








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions