வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்த அகில்

Bookmark and Share

வதந்திகளுக்கு முற்றுபுள்ளி  வைத்த அகில்

பிரபல நடிகர் நாகார்ஜுனா மற்றும் நடிகை அமலாவின் மகன் அகில் தற்போது தெலுங்கு திரைப்படமொன்றில் நாயகனாக நடித்து வருகின்றார். இப்படத்தை இயக்குநர் வி.வி.விநாயக் இயக்கி வருகின்றார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்புகள் ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகின்றன.
இதனை நாகார்ஜுனா மற்றும் அமலா ஸ்பெயின் நாட்டிற்கு  சென்று பார்வையிட்டனர். இந்நிலையில்  நடிகை சுவாதி நடிக்கும் திரிபுரா  படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் வி.வி.விநாயக்  வெளியிட்டார்.
ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற படப்பிடிப்புகளை விநாயக் புறக்கணித்து விட்டு ஐதராபாத் வந்து போஸ்டரை வெளியிட்டதற்கு காரணம் நாகார்ஜுனா படப்பிடிப்பை மேற்பார்வையிட்டது தான் காரணம் என டோலிவுட் வட்டாரத்தில்  கிசுகிசுக்கப்  பட்டது.  
ஆனால் இதனை படக்குழுவினர் மறுத்துள்ளனர். வெளிநாட்டு படப்பிடிப்பிற்குச் செல்லும் முன்னரே விநாயக் திரிபுரா போஸ்டரை வெளியிட்டு  விட்டதாகவும் ஆனால் திரிபுரா குழுவினர் தற்போது தான் அப்படத்தை வெளியிட்டுள்ளதாகவும் விளக்கமளித்துள்ளனர்.
மேலும் நடிகர் அகில் தனது முதல் வெளிநாட்டு படப்பிடிப்பில் பெற்றோர் கலந்து கொண்டது தான் உட்பட இயக்குநர் விநாயக் மற்றும் படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை தந்ததாக சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இதனால் அகில் படப்பிடிப்பில் சலசலப்பு என எழுந்த சர்ச்சைகளுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.


Post your comment





Related News
அகில் நடனத்தால் ரசிகர்களை கவர்ந்திழுப்பார் : நாகார்ஜுனா
சூடுபிடிக்கும் அகில் படம் !
படப்பிடிப்பு முடியும் தருவாயில் அகில்!
அகில் விடும் சவால் முன்னணி நடிகர்களுக்கு!
தாத்தா பிறந்தநாளில் பேரன் பட பாடல் வெளியீடு!
தாய்லாந்தில் சண்டையிட்டு முடித்த அகில்
சேஷா சைகலுடன் டூயட் பாடும் அகில்
பேங்காங்க்கில் சண்டையிடும் அகில்!
நடிகையை கடித்த நாய்!
மெகா பவர் ஸ்டாருடன் மோதும் அறிமுக நடிகர்....








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions