தாத்தா பிறந்தநாளில் பேரன் பட பாடல் வெளியீடு!

Bookmark and Share

தாத்தா பிறந்தநாளில் பேரன் பட பாடல் வெளியீடு!

பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா  மற்றும் நடிகை அமலாவின் மகன்  அகில் நாயகனாக அறிமுகமாகும் தெலுங்கு திரைப்படத்தின் பஸ்ட் லுக்கை  நாகார்ஜுனாவின் பிறந்த நாளான ஆகஸ்ட் 29 ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் ஏற்கனவே  திட்டமிட்டிருந்தனர். .

அதே போல் இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவின் தேதியும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. டோலிவுட்டின் மறைந்த மூத்த நடிகரும் அகிலன் தாத்தாவுமான நடிகர் அக்கினேனி நாகேஸ்வர ராவ் அவர்களின் பிறந்த தினமான செப்படம்பர் 26 ஆம் தேதி அகில் நடித்துள்ள படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இயக்குநர் விவி விநாயக் இயக்கும் இப்படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இப்படத்தில் அகிலுக்கு ஜோடியாக நடிகை சேஷா சைகள் நடித்து வருகின்றார்.

முதல் இரண்டு கட்ட படப்பிடிப்பை முடித்துள்ள படக்குழு அடுத்த கட்ட படப்பிடிப்பை ஆகஸ்ட் 4 ஆம் தேதி துவங்கவுள்ளனர். இப்படத்தை அக்டோபர் 22 ஆம் தேதி விஜயதசமி அன்று திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.


Post your comment





Related News
மங்காத்தா படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம்
என்னை மாமா என்று சமந்தா அழைப்பது மகிழ்ச்சி: நாகர்ஜுனா
மகாபாரதக் கதையில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நாகர்ஜுனாவுக்கு அழைப்பு
தங்கள் காதலை ஒருவரிடம் மட்டும் மறைத்த சமந்தா, நாக சைத்தன்யா
அகில் நடனத்தால் ரசிகர்களை கவர்ந்திழுப்பார் : நாகார்ஜுனா
சூடுபிடிக்கும் அகில் படம் !
படப்பிடிப்பு முடியும் தருவாயில் அகில்!
அகில் விடும் சவால் முன்னணி நடிகர்களுக்கு!
தாய்லாந்தில் சண்டையிட்டு முடித்த அகில்
சேஷா சைகலுடன் டூயட் பாடும் அகில்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions