படப்பிடிப்பு முடியும் தருவாயில் அகில்!

Bookmark and Share

படப்பிடிப்பு முடியும் தருவாயில் அகில்!

பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன்  அகில் டோலிவுட்டில் அதிரடி நாயகனாக  களம் இறங்கவுள்ளார். இயக்குநர் விவி விநாயக் இயக்கும் இப்படத்தில் அகிலுக்கு ஜோடியாக நடிகை சேஷா சைகள் நடித்துள்ளார்.


இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஈரோப்பில் நடைபெறுகின்றது. ஸ்பெயின்,  ஆஸ்திரியா போன்ற நாடுகளில் அகில் - சேஷா பங்கேற்கும் டூயட் பாடல் படமாக்கப்படவுள்ளது.  
இப்பாடல் படப்பிடிப்புடன் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெறும் என கூறப்படுகின்றது. படப்பிடிப்பை முடித்த பின்னர் ஹைதராபாத் திரும்பும் படக்குழு இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை துவங்கவுள்ளது. 


மறைந்த மூத்த நடிகரும் அகிலின் தாத்தாவுமான நடிகர் அக்கினேனி நாகேஸ்வர ராவ் அவர்களின் பிறந்த தினமான செப்படம்பர் 26 ஆம் தேதி அகில் நடித்துள்ள படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளது. இப்படத்தை அக்டோபர் 22 ஆம் தேதி விஜயதசமி அன்று திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.


Post your comment





Related News
மங்காத்தா படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம்
என்னை மாமா என்று சமந்தா அழைப்பது மகிழ்ச்சி: நாகர்ஜுனா
மகாபாரதக் கதையில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நாகர்ஜுனாவுக்கு அழைப்பு
தங்கள் காதலை ஒருவரிடம் மட்டும் மறைத்த சமந்தா, நாக சைத்தன்யா
அகில் நடனத்தால் ரசிகர்களை கவர்ந்திழுப்பார் : நாகார்ஜுனா
சூடுபிடிக்கும் அகில் படம் !
அகில் விடும் சவால் முன்னணி நடிகர்களுக்கு!
தாத்தா பிறந்தநாளில் பேரன் பட பாடல் வெளியீடு!
தாய்லாந்தில் சண்டையிட்டு முடித்த அகில்
சேஷா சைகலுடன் டூயட் பாடும் அகில்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions