சூடுபிடிக்கும் அகில் படம் !

Bookmark and Share

சூடுபிடிக்கும் அகில் படம் !

டோலிவுட்டில் பிரபல நடிகர் நாகார்ஜுனா மற்றும் நடிகை அமலாவின் மகனான அக்கினேனி அகில் நடிகர் நிதின் தயாரிப்பில் இயக்குநர் விவி விநாயக் இயக்கி வரும் தெலுங்கு படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகவுள்ளார். 

இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள இப்படத்தின் விநியோக உரிமைக்கான வியாபாரம் தற்போது துவங்கியுள்ளது. ஆந்திராவில் இப்படத்தை வெளியிட ரூ.18 கோடி கொடுத்து விநியோகஸ்தர்கள் வாங்கியுள்ளனர். 

நடிகர் நாகார்ஜுனாவின் படங்களின் வியாபாரத்தை விட அகில் படத்தின் விற்பனை அமோகமாக நடைபெறுகின்றதாம். அறிமுக நடிகர் ஒருவரின் படம் இந்த அளவிற்கு விற்பனை செய்துள்ளது இதுவே முதன் முறை என்றும் டோலிவுட் பக்கம் பேச்சு. 

நாகார்ஜுனாவின் பிறந்த நாளான்று வெளியான அகில் படத்தின் டீசரை 6 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்து ரசித்துள்ளனர். 

ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தை அக்டோபர் 22 ஆம் தேதி விஜயதசமி அன்று திரையிட முடிவு செய்யப்பட்டுள்ளனர்.


Post your comment





Related News
மங்காத்தா படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம்
என்னை மாமா என்று சமந்தா அழைப்பது மகிழ்ச்சி: நாகர்ஜுனா
மகாபாரதக் கதையில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நாகர்ஜுனாவுக்கு அழைப்பு
தங்கள் காதலை ஒருவரிடம் மட்டும் மறைத்த சமந்தா, நாக சைத்தன்யா
அகில் நடனத்தால் ரசிகர்களை கவர்ந்திழுப்பார் : நாகார்ஜுனா
படப்பிடிப்பு முடியும் தருவாயில் அகில்!
அகில் விடும் சவால் முன்னணி நடிகர்களுக்கு!
தாத்தா பிறந்தநாளில் பேரன் பட பாடல் வெளியீடு!
தாய்லாந்தில் சண்டையிட்டு முடித்த அகில்
சேஷா சைகலுடன் டூயட் பாடும் அகில்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions