சேஷா சைகலுடன் டூயட் பாடும் அகில்

Bookmark and Share

சேஷா சைகலுடன் டூயட் பாடும் அகில்

டோலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்த அகில் தற்போது இயக்குநர் வி.வி.விநாயக் இயக்கத்தில் ஒரு பெயரிடப்படாத படத்தில் நாயகனாக நடித்து வருகின்றார்.

பெரும்பாலும் வெளிநாடுகளிலேயே படமாகும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தாய்லாந்து நாட்டிலுள்ள தீவில் நடைபெற்று வருகின்றது. இப்படத்தில் அகிலுக்கு ஜோடியாக நடிகை சேஷா சைகல் நடித்து வருகின்றார். அகில் மற்றும் சேஷா சைகல் பங்கேற்கும் பாடல் காட்சிகள் இத்தீவில் படமாக்கப்பட்டு வருகின்றதாம்.

ஜூலை 6 ஆம் தேதி வரை இப்படத்தின் படப்பிடிப்பு தீவில் நடைபெறும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். நிதின் பெரும்பொருட்செலவில் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனுப் மற்றும் தமன் இசையமைத்து வருகின்றனர்.

இப்படத்திற்காக அகில் சவாலான சண்டைக் காட்சிகளில் அதிக முயற்சி எடுத்து நடித்துள்ளாராம். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் தலைப்பு குறிந்து படக்குழுவினர் ஆலோசனை செய்து வருவதாகவும் விரைவில் படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என கூறப்படுகின்றது.

பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மற்றும் நடிகை அமலாவின் மகன் தான் நாயகன் அகில் என்பது குறிப்பிடத்தக்கது


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions