அகிலா கிஷோருக்கு அதிர்ச்சி!

Bookmark and Share

அகிலா கிஷோருக்கு அதிர்ச்சி!

பார்த்திபன் இயக்கிய கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் நடித்தவர் அகிலா கிஷோர். பெங்களூர் நடிகையான இவர் அந்த படத்தில் சிறப்பாக நடித்திருந்தார். அதைப்பார்த்து விட்டு பாரதிராஜாவே இந்த நடிகையை எங்கே பிடிச்சே? அற்புதமாக நடித்திருக்கிறாள் என்று பார்த்திபனிடம் புகழ்மடல் வாசித்தார்.

அந்த விசயத்தை பார்த்திபன், அகிலாவிடம் சொன்னபோது, சந்தோச வானில் சிறகடித்தார். தமிழ் சினிமாவின் முக்கிய டைரக்டரே தனது நடிப்பை பாராட்டி விட்டதால் அடுத்தபடியாக படங்கள் அணிவகுக்கப்போகிறது என்று எதிர்பார்த்தார் அவர்.

ஆனால், அதன்பிறகு மூன்றாம் உலகப்போர் என்ற ஒரேயொரு படம் மட்டுமே அகிலா கிஷோருக்கு புக்கானது. அந்த படத்திலும் சில மாதங்களுக்கு முன்பே நடித்துக்கொடுத்து விட்டார் அகிலா.

இந்த நிலையில், நயன்தாராவின் ஜெராக்ஸ் மாதிரி இருக்கிறார் என்று சிலர் கூறியதை அடுத்து, நயன்தாராவிடம் கால்சீட் கேட்டு கிடைக்காமல் வேறு நடிகைகள் பக்கம் திரும்பிய டைரக்டர்களை சந்தித்து சான்ஸ் கேட்டார் அகிலா.

ஆனால், மார்க்கெட்டில் பேசப்படும் இடத்தில் அவர் இல்லாததால் முன்பு சான்ஸ் தருவதாக வாய் வார்த்தையில் அக்ரிமெண்ட் போட்டிருந்தவர்கள்கூட இப்போது ஸ்ரீதிவ்யா போன்ற நடிகைகள் பக்கம் திரும்பிக்கொண்டிருக்கின்றனர்.

அதனால் தமிழ் சினிமா மீது பெரிய எதிர்பார்ப்புகளுடன் வந்திறங்கிய அகிலா கிஷோர், மீண்டும் தாய்மொழியான கன்னட படங்களில் நடிக்க தீவிரம் காட்டத் தொடங்கிவிட்டார்.


Post your comment





Related News
முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'!
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
மறைந்த கிஷோர் குடும்பத்திற்கு ஏற்பட்ட சோகம்- திரையுலகம் என்ன செய்யப்போகிறது?
நடிகர் தனுஷ் ஒரு போன் கூட செய்யவில்லை இறந்த கிஷோரின் தந்தை உருக்கம்!
கபாலி படத்தில் நடிப்பது குறித்து மனம் திறந்த கிஷோர்!
கமலை தொடர்ந்து ரஜினியுடன் இணைந்த கிஷோர்!
ஒரே ஆண்டில் கமல் ரஜினியுடன் இணைந்த கிஷோர்!
கிஷோர் ஹீரோவாக நடிக்கும் கடிகார மனிதர்கள்
நடிகர் கிஷோரின் கவலை!
காதலி காணவில்லை பாடல்களை கவர்னர் வெளியிட்டார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions