கண்கலங்க வைத்த அகிலா கிஷோர்!

Bookmark and Share

கண்கலங்க வைத்த அகிலா கிஷோர்!

பார்த்திபனின் கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தை அடுத்து சந்தானத்தின் இனிமே இப்படித்தான் படத்தில் நடித்துள்ள கன்னட நடிகை அகிலா கிஷோர், இந்த படங்களில் இளைஞர்களை கொள்ளை கொள்ளும் கிளாமரை வாரி வழங்கி நடித்திருக்கிறார்.

அதிலும், பார்த்திபன் படத்தில் பாடல் காட்சிகளில் பளிச்சிட்டதை விட, சந்தானத்தின் இனிமே இப்படித்தான் படத்தில் கூடுதல் கிளாமராய் ஜொலித்திருக்கிறாராம் அகிலா.

இதே படத்தில் இன்னொரு நாயகியான ஆஷ்னா சவேரியும் இருப்பதால் அவருக்கு முன்பு தான் சோடை போய் விடக்கூடாது என்று இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளாராம் அகிலா.

இந்த படங்களை அடுத்து அவர் நடித்திருக்கும் இன்னொரு படம்தான் மூன்றாம் உலகப்போர். இந்தியா-சீனாவுக்கிடையிலான போர்முனை கதையில் இப்படம் உருவாகியிருக்கிறது.

2025க்கு பிறகு இந்தியா சீனாவுக்கிடையே போர் நடந்தால் சீனாவின் பல ஏரியாக்கள் இந்தியா வசம் வந்து விடும் என்கிற வகையில் இந்த படத்தின் கதை உருவாகியுள்ளது.

சுனில்குமார் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் அவரது காதலியாக அகிலா கிஷோர் நடித்திருக்கிறார். ஆனால், காதலிப்பது மட்டுமே இல்லாமல், மண் சார்ந்த சில உணர்வுப்பூர்வமான காட்சிகளிலும் நடித்து கண்கலங்க வைத்துள்ளாராம் அகிலா.

அதனால் இந்த படத்திற்கு பிறகு அகிலா கிஷோரின் கோலிவுட் மார்க்கெட் எகிறி விடும் என்கிறார்கள்.


Post your comment





Related News
கவர்ச்சி நடிகை ஷகீலாவின் படத்தின் இணைந்த பிரபல நடிகர்!
முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'!
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
10 வருடத்திற்கு பிறகு மீண்டும் லீலையை ஆரம்பித்த ஷகிலா - புகைப்படம் உள்ளே.!
மறைந்த கிஷோர் குடும்பத்திற்கு ஏற்பட்ட சோகம்- திரையுலகம் என்ன செய்யப்போகிறது?
படவாய்ப்புக்காக அப்படி செய்ததில்லை – ஷகிலா பேட்டி!
ஷகிலாவின் வாழ்க்கை திரைப்படமாகிறது!
நடிகர் தனுஷ் ஒரு போன் கூட செய்யவில்லை இறந்த கிஷோரின் தந்தை உருக்கம்!
கமலின் உதடு முத்தம் பிடிக்காது: ஷகிலா பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions