லட்சுமிராய் நடிக்கும் பாலிவுட் படம்... அகிரா

Bookmark and Share

லட்சுமிராய் நடிக்கும் பாலிவுட் படம்... அகிரா

விஜய், சமந்தா நடித்த 'கத்தி' படத்திற்குப் பிறகு பாலிவுட் சென்ற ஏ.ஆர்.முருகதாஸ், 'அகிரா' என்ற ஹிந்திப்படத்தை இயக்கி வருகிறார். சோனாக்ஷி சின்ஹா கதாநாயகியாக நடிக்கும் இப்படம் முழுக்க முழுக்க கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்படுகிறது.

தமிழில் சாந்தகுமார் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் வெளிவந்த 'மௌனகுரு' படத்தின் கதைதான் அகிரா. முறைப்படி ரீமேக் ரைட்ஸ் வாங்கி, ஹிந்திக்காக கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து மாற்றப்பட்டிருக்கிறது.

'அகிரா' வின் முதல் கட்ட படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக மும்பையில் நடைபெற்று வந்தது. முதல்கட்டப்படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், தற்போது 2 ஆம் கட்ட படப்பிடிப்பை தொடங்கிவிட்டார் முருகதாஸ்.

இதில் நடிகை லட்சுமிராயும் கலந்து கொள்கிறார்.  ஏன்? அகிராவில் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கிறார் லட்சுமிராய். இது லட்சுமிராய் நடிக்கும் முதல் பாலிவுட் படம் என்பது குறிப்பிடத்தக்கது.  பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப்பும் இப்படத்தில் நடிக்கிறார்.  ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.


Post your comment





Related News
கோலிவுட்டை நோக்கி ஹாலிவுட் கவர்ச்சி வருகை சன்னி லியோனைத் தொடர்ந்து மியா ராய் லியோன்
அழகாக படம் பிடித்த இடங்கள் அலங்கோலமாக கிடக்கின்றன - சீமத்துரை படக்குழு வேதனை
கிராமத்து காதலை பேசும் சீமதுரை!
சூப்பர் ஸ்டாராக கலக்கிய விஜய் சேதுபதி
பிக்பாஸ் ரைசாவை கொண்டாட்டத்தில் ஆழ்த்திய விஷயம்..!
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!
லட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம் 'சிண்ட்ரல்லா' !
காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..!
பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions