அகிரா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

Bookmark and Share

அகிரா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

‘கத்தி’ படத்திற்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இந்தியில் சோனாக்ஷி சின்ஹாவை வைத்து ‘அகிரா’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படம் தமிழில் வெளிவந்த ‘மௌனகுரு’ படத்தின் ரீமேக் ஆகும். இப்படத்தில் ராய் லட்சுமியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று வெளியிட்டுள்ளனர். சோனாக்ஷி சின்ஹா கோபத்துடன் நிற்பதுபோன்ற புகைப்படத்துடன் வெளிவந்துள்ள போஸ்டர் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. 

இத்துடன், இப்படம் செப்டம்பர் 2-ந் தேதி வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் படத்தை இயக்கவிருக்கிறார். இப்படத்தில் மகேஷ்பாபு, எஸ்.ஏ.சூர்யா ஆகியோர் நடிக்கவிருக்கின்றனர்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions