பொருட்களை வாங்க தனி சேனல் துவக்கம்

Bookmark and Share

பொருட்களை வாங்க தனி சேனல் துவக்கம்

பொழுதுபோக்கு சேனல், செய்தி சேனல், விளையாட்டு சேனல், குழந்தைகள் சேனல், பாடல்களுக்கு தனி சேனல், பழைய படங்களுக்கு தனி சேனல், பக்தி சேனல். காமெடி சேனல், விஞ்ஞான சேனல், விலங்குகள் சேனல் என தனித்தனி சேனல்கள் வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் முதன் முறையாக பொருட்களை வாங்க தனி சேனல் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.

அதன் பெயர் பிக் டீல் டி.வி. முக்கிய இந்திய மொழிகளில் ஒளிபரப்பாகும் இந்த சேனலை பிரபல தொழிலதிபர் ராஜ் குந்த்ரா, பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், கோலிவுட் நடிகர் விக்ரம் ஆகியோர் இணைந்து நடத்துகிறார்கள். தமிழில் இந்த சேனல் வருகிற 18ந் தேதி முதல் ஒளிபரப்பை தொடங்குகிறது.

இந்த சேனல் மூலம் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான வீட்டு உபயோக பொருட்கள், உடை, உடல் நலம், அழகு சாதன பொருட்கள் விற்கப்படுகிறது. இதுகுறித்து பிக் டீல் டிவி நிறுவனர் ராஜ் குந்த்ரா  கூறியதாவது: 6 மாத காலத்திற்குள் எங்களது இரண்டாவது ஹோம் ஷாப்பிங் சேனல் வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்.

இம்முறை தமிழகத்தில் பிரபலங்களால் இயக்கப்படும் 24 மணி நேர ஹோம் ஷாப்பிங் தொலைக்காட்சி சேனல் “பிக் டீல் டீவி”யை பிரபல நடிகர் சியான் விக்ரமுடன் இணைந்து செயல்படுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. பிக் டீல் டிவியில் சரியான மற்றும் நம்பகத்தன்மையான பொருட்கள் சிறந்த விலையில் விற்கப்படும். என்றார்.

 


Post your comment





Related News
சசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா? வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா..?
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
பிரபுதேவா, அக்‌ஷய் குமார், சோனாக்சி சின்ஹா, கத்ரினா கைப் மீது வழக்கு
“திரையுலக பிரச்சனைக்கு முதலில் குரல் கொடுங்கள்” ; ரஜினி-கமலுக்கு ஜே.எஸ்.கே பிலிம்ஸ் சதீஷ்குமார் வேண்டுகோள்..!
சூப்பர் ஸ்டாரின் 2.O படத்தின் கதை இது தான் - இயக்குனர் ஷங்கரே சொன்ன தகவல்.!
ரஜினிக்கு பிறகு அஜித் மட்டுமே படைத்த சாதனை
2.0 படம் குறித்து செம்ம அப்டேட்டை வெளியிட்ட ஷங்கர்
2.0-வில் நான் ஹீரோ இல்லை – ரஜினியின் பேச்சால் ரசிகர்கள் அதிர்ச்சி!
2.o படப்பிடிப்பில் மீண்டும் ரஜினி இணைவது எப்போது?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions