அழகுக்கு அழகு சேர்க்கும் அக்ஷரா!

Bookmark and Share

அழகுக்கு அழகு சேர்க்கும் அக்ஷரா!

ஸ்ருதிஹாசன் சினிமாவில் எப்படி இசையமைப்பாளராக வேண்டும் என்று களமிறங்கினாரோ அதேபோன்று அவர் தங்கை அக்சராவும் இயக்குனராக வேண்டும் என்றுதான் சினிமாவிற்குள் வந்தார். மணிரத்னத்திடம் உதவி இயக்குனராகவும் பணியாற்றினார்.

ஆனால், அக்காள் ஸ்ருதிஹாசனுடன் இணைந்து அவர் சினிமா விழாக்களுக்கு விசிட் அடித்ததால், சினிமாகாரர்களின் கண் அவர் மீது விழுந்தது.

அதைத்தொடர்ந்து ஆந்திராவைச்சேர்ந்த சில டைரக்டர்கள் அக்சராவை நடிப்பதற்குஅழைத்தனர். ஆனால் அவர் மறுத்து விட்டார். பின்னர், 

அமிதாப்பச்சன்-தனுஷ் நடித்த ஷமிதாப் படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடிக்க அழைத்தபோது அவரால் மறுக்க முடியவில்லை.

அதனால் ஷமிதாப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் அக்சரா.

ஆனால், ஒரு விபத்து போன்று அவர் நடிகையானதால், இந்தி சினிமா நடிகைகள் உடல் அழகில் கவனம் செலுத்துவது போன்று இல்லாமல் சாதாரணமாக களமிறங்கினார் அக்சரா. ஆனால் இப்போதுதான் அவருக்கு தன்னை இன்னும் அழகுபடுத்த வேண்டும் என்பதில் ஆர்வம் ஏற்பட்டுள்ளதாம்.

அதனால், தனது உடலை மேலும் அழகுபடுத்தும்விதமாக பிரத்யேகமாக ஒரு பாடி பிட்னஸ் நிபுணரை நியமித்திருக்கும் அவர், உடையலங்காரம், சிகையலங்காரம் உள்ளிட்ட அனைத்து கலைகளிலும் சிறந்த வல்லுனர்களாக சிலரை தேர்ந்தெடுத்து அடுத்தடியாக தான் நடிக்கும் படங்களுக்கு யூஸ் பண்ணவும் முடிவு செய்திருக்கிறார்.


Post your comment





Related News
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
அக்ஷரா ஹாசனுக்கு ஜோடியாக முன்னணி தமிழ் நடிகரின் மகன்
பெரியதிரையில் ரசிகர்களை கவர வரும் அக்‌ஷரா ரெட்டி
இதில் என்ன வெட்கம் வேண்டி இருக்கு: அஜீத் பட நடிகை அக்ஷரா
எந்த படத்துக்கும் இல்லாமல் அஜித் படத்துக்கு மட்டுமே இப்படி நடக்கிறது- பிரபல திரையரங்க உரிமையாளர்
எனக்கும், அவருக்கும் ஓகே, ஆனால் அது நடக்கனுமே- அக்ஷாரா ஹாசன்
அக்‌ஷரா ஹாசனுக்கு கடும் எதிர்ப்பு- தீவிரமடையும் பிரச்சனை
இப்படி செய்துவிட்டாரே, நெட்டிசன்களிடம் சிக்கிய அக்‌ஷரா ஹாசன்- புகைப்படம் உள்ளே
வாழ்க்கையில் நிறைய சர்ச்சைகளை சந்தித்தவர்தான் கமல்ஹாசன்: அக்‌ஷராஹாசன்
இளம் வயதில் கர்ப்பமாகும் அக்‌ஷரா ஹாசன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions