இதில் என்ன வெட்கம் வேண்டி இருக்கு: அஜீத் பட நடிகை அக்ஷரா

Bookmark and Share

இதில் என்ன வெட்கம் வேண்டி இருக்கு: அஜீத் பட நடிகை அக்ஷரா

பெங்களூர்: தான் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதாகவும், அது குறித்து பொது இடத்தில் பேச வெட்கப்படவில்லை என்றும் நடிகை அக்ஷரா கவுடா தெரிவித்துள்ளார். அஜீத்தின் ஆரம்பம் படம் மூலம் பெயர் பெற்றவர் பெங்களூரை சேர்ந்த நடிகை அக்ஷரா கவுடா.

அடுத்து அவர் ஜெயம் ரவியின் போகன் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அக்ஷரா கவுடா மன அழுத்தம் பற்றி பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறும்போது,சந்தோஷமாக, தன்னம்பிக்கையுடன் இருக்கும் அக்ஷராவை நீங்கள் பார்க்கிறீர்கள்.

ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நான் இப்படி இல்லை. மன அழுத்தத்துடன் போராடிக் கொண்டிருந்தேன். மருத்துவரின் உதவியை நாடி அதில் இருந்து முழுமையாக குணமடைந்துவிட்டேன்.மன அழுத்தம் பற்றி பொது இடத்தில் பேச நான் வெட்கப்படவில்லை.

மன அழுத்தத்தோடு போராடுபவரா நீங்கள்? நீங்கள் தனி ஆள் இல்லை. பலர் மன அழுத்தத்துடன் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.எப்பொழுது பார்த்தாலும் சோர்வாக உணர்வேன். சும்மா இல்லாமல் பிசியாகவே இருந்தாலும் அந்த உணர்வு உண்டு. நாள் முழுவதும் பிசியாக இருந்தாலும் இரவில் தூக்கம் வராது.

பிசியாக இருக்க அமெரிக்கா சென்று நடனம் கற்றேன். ஆனாலும் சோர்வு மாறவில்லை. அதன் பிறகே மனநல மருத்துவரை சந்தித்து உதவி பெற்று குணமடைந்தேன்.நீ இப்படி யாரிடமாவது கூறினால் உன்னை பைத்தியம் என அழைப்பார்கள் என்று என் அம்மாவே கூறினார்.

இதனால் பலர் மன அழுத்தம் பற்றி வெளியே கூறுவது இல்லை. மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட தீபிகா படுகோனேவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் ஷ்யாம் பட்டிடம் சிகிச்சை எடுத்து குணமடைந்தேன் என்றார் அக்ஷரா.


Post your comment

Related News
எந்த படத்துக்கும் இல்லாமல் அஜித் படத்துக்கு மட்டுமே இப்படி நடக்கிறது- பிரபல திரையரங்க உரிமையாளர்
எனக்கும், அவருக்கும் ஓகே, ஆனால் அது நடக்கனுமே- அக்ஷாரா ஹாசன்
அக்‌ஷரா ஹாசனுக்கு கடும் எதிர்ப்பு- தீவிரமடையும் பிரச்சனை
இப்படி செய்துவிட்டாரே, நெட்டிசன்களிடம் சிக்கிய அக்‌ஷரா ஹாசன்- புகைப்படம் உள்ளே
வாழ்க்கையில் நிறைய சர்ச்சைகளை சந்தித்தவர்தான் கமல்ஹாசன்: அக்‌ஷராஹாசன்
இளம் வயதில் கர்ப்பமாகும் அக்‌ஷரா ஹாசன்
விநியோகஸ்தரை திட்டிய அஜித் பட நாயகி- நிகழ்ச்சியில் பரபரப்பு
மொட்டை தலையுடன் நடிக்க தயார்: அக்‌ஷராஹாசன்
விவேகம் நடிகை அக்‌ஷராவுக்கு இப்படியொரு விபரீத ஆசையா?
இத்தனை நாடுகளில் உருவாகிறதா ‘தல 57’ – ஆச்சரிய தகவல்!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions