
இந்தியாவின் புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளர் ரீனா டாக்கா. இவர் இந்தியா மற்றும் உலகளவில் நடக்கும் பெரும்பாலான பேஷன் ஷோக்களில் தனது தனித்துவமான ஆடை வடிவமைப்பால் அனைவரையும் கவர்ந்தவர்.
இவர் டெல்லியில் வரும் ஆகஸ்ட் 7-ந் தேதி நடக்கவிருக்கும் மணப்பெண்களுக்கான ஆடை வடிவமைப்புக்கான ஃபேஷன் ஷோவில் தன்னுடைய பிரத்யேக ஆடை வடிவமைப்புகளை பார்வையாளர்களுக்கு காண்பிக்க உள்ளார்.
இந்த பேஷல் ஷோவில் கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்ஷரா ஹாசன், ரீனாவின் ஆடை வடிவமைப்புகளுக்கு ஷோ ஸ்டாப்பர் ஆக வலம் வரவிருக்கிறார். ரீனா டாக்கா தனது ஆடையை பூக்களால் வடிவமைக்க இருக்கிறார்.
தன்னுடைய இந்த மணப்பெண்களுக்கான பிரத்யேக தொகுப்பில் முதன்மை மாடலாக அக்ஷரா ஹாசன் இடம்பெற இருப்பதாக ரீனா தெரிவித்தார்.
பிரபல இந்தி நடிகை ஆலியா பட் அல்லது அக்ஷராதான் இந்த தொகுப்பின் மாடலாக இருக்க வேண்டும் என ரீனா விரும்பியுள்ளார்.
ஆனால், அக்ஷரா ஹாசனின் முகத்தில் இருக்கும் அப்பாவித்தனம் பூக்களோடு வடிவமைக்கப்படும் ஆடைக்கு ஏற்ப இருப்பதால் அவரை தேர்ந்தெடுத்ததாகவும் ரீனா தெரிவித்தார்.
Post your comment