தமிழ் படங்களில் நடிக்க வருவேன்: நடிகை அக்ஷரா பேட்டி

Bookmark and Share

தமிழ் படங்களில் நடிக்க வருவேன்: நடிகை அக்ஷரா பேட்டி

கமல்ஹாசனின் மூத்த மகள் சுருதிஹாசன் சினிமாவில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். இவரை தொடர்ந்து கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்ஷராஹாசனும் சினிமாவுக்கு வந்துள்ளார். இந்தியில் தயாரான ‘ஷமிதாப்’ படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்தார். 

இந்த படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. இதில் அக்ஷராஹாசன் சிறப்பாக நடித்து இருந்ததாக பாராட்டுகள் குவிந்தன. தொடர்ந்து இந்திப் படங்களில் நடிக்க அவர் கதை கேட்டு வருகிறார். தமிழ் படங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் அவர் இந்தியில் நடிக்கவே ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அக்ஷராஹாசனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:- 

“எனக்கு தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க விருப்பம் உள்ளது. ஆனால் அதற்கான நேரம் இன்னும் வரவில்லை என்று கருதுகிறேன். முதலில் இந்திபட உலகில் காலூன்ற வேண்டும் என்பதே என் நோக்கமாக இருக்கிறது. இங்கு சாதித்துவிட்டுதான் தமிழ், தெலுங்கு படங்களுக்கு வருவேன். எனது தந்தை கமல்ஹாசனும், தாய் சரிகாவும் திறமையான நடிகர்கள். 

வாழ்க்கையில் சொந்தமாக நான் முடிவுகள் எடுத்துக்கொள்ள அவர்கள் எனக்கு உரிமை அளித்துள்ளனர். ஒரு சிறந்த நடிகையாக என்னை உருவாக்கி வருகிறேன். இந்தி படங்களில் நடிக்க கதைகள் கேட்டு வருகிறேன். இன்னும் எந்த படமும் முடிவாகவில்லை”. 

இவ்வாறு அக்ஷரா ஹாசன் கூறினார்.


Post your comment





Related News
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions