விஷாலுக்கு ஜோடியாக நடிக்கிறேனா?: அக்ஷரா ஹாசன் விளக்கம்

Bookmark and Share

விஷாலுக்கு ஜோடியாக நடிக்கிறேனா?: அக்ஷரா ஹாசன் விளக்கம்

கமலின் இளையமகள் அக்ஷரா ஹாசன், இந்தியில் பால்கி இயக்கிய ‘ஷமிதாப்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இப்படத்தில் அவருடைய நடிப்பு பிரமாதமாக பேசப்படவே, இவரை நோக்கி இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் படையெடுக்கத் தொடங்கினார். ஆனால், எந்த படங்களிலும் நடிக்க ஒப்புக்கொள்ளாமல் இருந்து வருகிறார். 

இந்நிலையில், லிங்குசாமி-விஷால் கூட்டணியில் வெளிவந்த ‘சண்டக்கோழி’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இயக்குனர் லிங்குசாமி ஆர்வம் காட்டி வருகிறார். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக அக்ஷராஹாசன் நடிக்கவிருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளிவந்தன. 

தற்போது இந்த செய்தியை அக்ஷரா ஹாசன் மறுத்துள்ளார். ‘சண்டக்கோழி’ இரண்டாம் பாகத்தில் நடிக்க யாரும் என்னிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று கூறியுள்ளார். 

விஷால் தற்போது ‘பாயும் புலி’ படத்தில் பிசியாக இருக்கிறார். இந்த படத்தை முடித்துவிட்டு ‘சண்டக்கோழி’ இரண்டாம் பாகத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் ‘சண்டக்கோழி’ படத்தில் ஹீரோயினாக நடித்த மீரா ஜாஸ்மின் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.


Post your comment





Related News
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது - ஸ்ருதிஹாசன்
அமெரிக்காவில் நடைபெறும் இந்திய சுதந்திர தின விழாவில் கமல்ஹாசன், ஸ்ருதி பங்கேற்பு
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
அக்ஷரா ஹாசனுக்கு ஜோடியாக முன்னணி தமிழ் நடிகரின் மகன்
எங்களை பிக்பாஸ் வீட்டிற்குள் விட்டால் இதுதான் நடக்கும் நிச்சயம்! ஜோடியாக வரவிரும்பும் பிரபல நடிகர், நடிகை இவர்கள் தான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions