அப்பா-அம்மா பிரிவால் தைரியம் வந்தது:அக்ஷரா ஓபன் டாக்

Bookmark and Share

அப்பா-அம்மா பிரிவால் தைரியம் வந்தது:அக்ஷரா ஓபன் டாக்

இந்தியில் காலூன்றிய பிறகு தமிழில் நடிப்பேன் என்றார் அக்ஷரா.கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷரா. இந்தியில் ‘ஷமிதாப்‘ படம் மூலம் நடிகையாக அறிமுகமாகிறார்.

அவர் கூறியது:

எனக்கு 10 வயதாக இருக்கும்போது எனது பெற்றோர் (கமல்&சரிகா) பிரிந்தனர். அம்மாவுடன் நானும், அக்கா ஸ்ருதியும் வளர்ந்தோம். ஆனாலும் அப்பா கமலுடனும் தொடர்பிலேயே இருந்தேன். என் வாழ்வில் என் அம்மாதான் எனக்கு ராணி.

அப்பாவை பொறுத்தவரை ரொம்பவும் ஜாலியாக பழகுவார். அம்மா, அப்பா இருவரின் கலவையாக நான் வளர்ந்தேன்.  அப்பாவைபோல் நானும் கடவுள் நம்பிக்கை இல்லாதவள்.

ஆனால் கோயில், சர்ச் இரண்டுக்கும் செல்வேன். ஏதோ ஒன்று அங்கு இருப்பதாக உணர்வேன். சிறு வயதிலேயே நடனம் மீது எனக்கு ஆர்வம். மேற்கத்திய நடனம் முதல் பரதநாட்டியம் வரை கற்றுக்கொண்டேன்.

அம்மா, அப்பாவின் பிரிவு என்னை யார் என்று புரிய வைத்தது. அதுதான் எனக்கு தைரியத்தை தந்தது. அக்கா ஸ்ருதி என் மீது  எப்போதும் ஒரு பாதுகாப்பு உணர்வோடு பழகுவார்.

இயக்குனர் ஆக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருக்கிறது. கதைகள் எழுதி வருகிறேன். இந்த திறமை அப்பாவிடம் இருந்து வந்ததுதான். தமிழ் படங்களில் நடிக்கும் எண்ணம் இருக்கிறது.

ஆனால் இப்போதைக்கு பாலிவுட்டில் அறிமுகமானதால் அங்கு காலூன்றிவிட்டு வருவேன். நானும் இந்தி நடிகர் விவான் ஷாவும் டேட்டிங் செய்துவந்தோம். இப்போதும் நண்பர்களாக பழகுகிறோம். அவர் கடுமையான உழைப்பாளி, நம்பிக்கையானவர்.இவ்வாறு அக்ஷரா கூறினார்.


Post your comment





Related News
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது - ஸ்ருதிஹாசன்
அமெரிக்காவில் நடைபெறும் இந்திய சுதந்திர தின விழாவில் கமல்ஹாசன், ஸ்ருதி பங்கேற்பு
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
அக்ஷரா ஹாசனுக்கு ஜோடியாக முன்னணி தமிழ் நடிகரின் மகன்
எங்களை பிக்பாஸ் வீட்டிற்குள் விட்டால் இதுதான் நடக்கும் நிச்சயம்! ஜோடியாக வரவிரும்பும் பிரபல நடிகர், நடிகை இவர்கள் தான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions