அக்சராவுக்கு பிடித்த டைரக்டர் கெளதம்மேனன்!

Bookmark and Share

அக்சராவுக்கு பிடித்த டைரக்டர் கெளதம்மேனன்!

தனது மூத்த மகளான ஸ்ருதிஹாசனை நடிகையாக்க வேண்டும் என்பது கமலின் நோக்கமே இல்லை. அவரை இசைத்துறையில் பெரிய அளவில் கொணடு வர வேண்டும் என்றுதான் சின்ன வயதிலேயே இளையராஜா போன்ற முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பின்னணி பாட வைத்து வந்தார்.

அதேபோல், தனது படத்திலேயே அவரை இசையமைப்பாளராக அறிமுகம் செய்தால் அவரது வளர்ச்சி பெரிய அளவில் இருக்கும் என்று உன்னைப்போல் ஒருவன் படத்தில் இசையமைப்பாளராக்கினார்.

ஆனால், பின்னர் அவருக்கு இசையில் வாய்ப்புகள் அமையாததால், திடீரென்று லக் இந்தி படத்தில் அரிதாரம் பூசினார் ஸ்ருதிஹாசன். விளைவு, இப்போது இந்திய அளவில் பிரபல நடிகை என்கிற பரபரப்பான இடத்தை பிடித்து விட்டார்.

இந்த நிலையில், கமலின் இளைய மகளான அக்சராவுக்கும் நடிப்பில் ஆர்வம் இருந்ததில்லை. இயக்குனராக வேண்டும் என்றுதான் மணிரத்னம் உள்ளிட்ட சிலரிடம் உதவியாளராக பணியாற்றி வந்தார்.

இப்போது அவரும் எதிர்பாராதவிதமாக ஷமிதாப் படத்தில் கதாநாயகியாகி விட்டார். அடுத்தபடியாக இந்தியில் நடிப்பதற்கும் கதைகள் கேட்டு வரும் அவரை, தமிழுக்கு கொண்டு வந்து விட வேண்டும் என்றும் சில இயக்குனர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.

ஆனால், இன்னும் யாருக்கும் அவர் பிடி கொடுக்கவில்லை. அதேசமயம், தமிழில் எனக்கு பிடித்த டைரக்டர் கெளதம்மேனன்தான். அதனால் அவர் படத்தில் இருந்து எனக்கு நடிக்க வாய்ப்பு வந்தால் ரொம்ப சந்தோசப்படுவேன் என்று சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார் அக்சராஹாசன்.


Post your comment





Related News
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
அக்ஷரா ஹாசனுக்கு ஜோடியாக முன்னணி தமிழ் நடிகரின் மகன்
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
பெரியதிரையில் ரசிகர்களை கவர வரும் அக்‌ஷரா ரெட்டி
ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்
மெர்சலை அடுத்து நித்யா மேனன் எடுத்த திடீர் சபதம் - வியப்பான ரசிகர்கள்.!
சினிமா மீது எனக்கு எப்போதுமே பேரார்வம் உண்டு - சுரேஷ் மேனன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions