பவன் கல்யாண் படத்தில் நடிக்க மறுத்த அக்ஷரா ஹாஸன்?

Bookmark and Share

பவன் கல்யாண் படத்தில் நடிக்க மறுத்த அக்ஷரா ஹாஸன்?

தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் ஜோடியாக கப்பார் சிங் 2 படத்தில் நடிக்க அக்ஷரா ஹாஸன் மறுத்துவிட்டாராம். கமல் ஹாஸனின் இளைய மகள் அக்ஷரா ஹாஸன் இயக்குனராகும் ஆசையில் பாலிவுட் படங்களில் பணியாற்றி வந்தார். அவர் இயக்குனராக விரும்பும்போதிலும் அவருக்கு நடிக்க வாய்ப்புகள் வந்து குவிகின்றன. அப்படி வந்த பல வாய்ப்புகளை ஏற்க மறுத்த அவர் ஒரு வாய்ப்பை மட்டும் ஏற்றுக் கொண்டார்.

ஆர். பால்கி தன்னை அணுகி நடிக்குமாறு கேட்டபோது அக்ஷரா ஹாஸன் மறுப்பு தெரிவிக்காமல் அவரின் ஷமிதாப் படத்தில் நடித்துக் கொடுத்துள்ளார்.
தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் கப்பார் சிங் 2 படத்தில் நடிக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக நடிக்குமாறு அக்ஷராவிடம் கேட்டுள்ளனர். ஆனால் அவரோ பவன் படத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம்.

முதலில் பாலிவுட்டில் தனக்கு ஒரு இடத்தை பிடித்துவிட்டு அதன் பிறகு தெலுங்கு, தமிழ் சினிமா பக்கம் வரலாம் என்று இருக்கிறாராம் அக்ஷரா.
கப்பார் சிங் படத்தில் பவன் கல்யாண் ஜோடியாக ஸ்ருதி ஹாஸன் நடித்தார். இந்நிலையில் கப்பார் சிங் படத்தின் 2ம் பாகத்தில் நடிக்க வந்த வாய்ப்பை ஏற்க அக்ஷரா மறுத்துள்ளார்.

 


Post your comment





Related News
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
புதிரான இயக்குனர் படத்தில் ஹரிஷ் கல்யாண்
ஹரிஷ் கல்யாணின் அடுத்த படம், இயக்க போவது யார் தெரியுமா?
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!
பியார் பிரேம காதல் கதை என்ன? - ஹரிஷ் கல்யாண் ஓபன் டாக்.!
காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..!
பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
பியார் ப்ரேமா காதல் பட நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா பேசியதை கேட்டீர்களா..!
பியார் பிரேம காதல் படத்தின் பாடல்களை வெளியிட்ட இளையராஜா..!
கல்யாணமும் கடந்து போகும் வலைத்தொடர் பிராண்டுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது - நலன் குமாரசாமி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions