மன அழுத்தத்துக்கு தற்கொலை தீர்வு ஆகாது: அக்‌ஷய் குமார்

Bookmark and Share

மன அழுத்தத்துக்கு தற்கொலை தீர்வு ஆகாது: அக்‌ஷய் குமார்

தேர்வு பயத்தால் மன அழுத்தத்தில் இருக்கும் மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் நடிகர் அக்‌ஷய் குமார் வீடியோ மூலம் ஆலோசனை தெரிவித்துள்ளார். அதில், அவர் கூறி இருப்பதாவது:-

நான் சிறுவனாக இருந்தபோது என்னுடைய தந்தை என் அருகே அமர்ந்து, பெரியவனானதும் என்னவாக ஆசைப்படுகிறாய்? என்று கேட்டார். அப்போது, எனக்கு விளையாட்டில் ஆர்வம் இருப்பதாக கூறினேன். தற்காப்பு கலைகளை கற்று தேர்ந்தேன். இதைத்தொடர்ந்து, விளையாட்டு, மாடலிங் மற்றும் நடிப்பு என காலங்கள் கடந்துவிட்டன.

என்னுடைய பெற்றோர் மட்டும் எனக்கு ஆதரவாக இல்லை என்றால், தேசிய விருதை வெல்வது நெடுந்தூர கனவாகவே போயிருக்கும். குழந்தைகளின் வாழ்க்கை மீது பெற்றோர் அதிக கவனம் செலுத்துங்கள். மன நோயை மற்ற வியாதியை போல் பாருங்கள்.

இளைஞர்கள் வாழ்க்கையை லேசாக எடுத்து கொள்ள கூடாது. அதன் மதிப்பை உணர வேண்டும். உங்கள் உணர்வுகளை சிதைத்துவிடாதீர்கள். அதனை உங்களுக்கு அன்பானவர்களிடமும், அருகில் இருப்பவர்களிடமும் பகிருங்கள். மன அழுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர தற்கொலை ஒருபோதும் தீர்வு ஆகாது.

இவ்வாறு அக்‌ஷய் குமார் தெரிவித்தார். 


Post your comment

Related News
தேசிய விருது தளபதிக்கு தான்- கூறிய முன்னணி பிரபலம்
நாச்சியார் படத்தில் நடித்தது பற்றி மனம் திறந்த ஜி.வி.பிரகாஷ்.!
தந்தையுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி
இத்தாலி மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது சிவகுமாரின் “ மகாபாரதம் “
பலருக்கும் தெரியாத படையப்பா ரகசியம் - நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளிவந்த உண்மை.!
தன் வீட்டு வேலைக்காரரின் திருமணத்தில் குடும்பத்துடன் கலந்து கொண்ட சிவகுமார், சூர்யா, கார்த்தி.!
மீண்டும் இணையும் நாடோடிகள் கூட்டணி - சூப்பர் தகவல்.!
அஜித் மட்டும் தான் அந்த விசயத்துல தலையிடாதவர் - பிரபல இயக்குனர் ஓபன் டாக்.!
“எஜமான்-2” எடுப்பேன் ; விருது விழாவில் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் தகவல்..!
நட்சத்திர விழா கொண்டாட்டம்- ஆனால் பிரபல நாயகிக்கு ஏற்பட்ட அவமானம்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions